Automobile Tamil

புதிய மாருதி சுசூகி பிரெஸ்ஸா முன்பதிவு துவங்கியது

brezza teaser

முந்தைய விட்டாரா பிரெஸ்ஸா காரை விட முற்றிலும் மாறுபட்ட 2022 மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவி விற்பனைக்கு ஜுன் 30 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. புதிய பிரெஸ்ஸாவிற்கான முன்பதிவு Arena டீலர்ஷிப்களிலும், ஆன்லைனிலும் தொகை ரூ.11,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிரெஸ்ஸா எஸ்யூவி காரின் தோற்றம் புதிய பேனல்கள் மற்றும் இன்டிரியர் மேம்பட்டதாக கிடைக்கும். மாருதி சுஸுகி வெளியிட்டுள்ள டீசர் படத்தில் நவீனத்துவமான ஹெட்லேம்ப் டிசைன் மற்றும் ஸ்டைலான பகல்நேர ரன்னிங் விளக்குகளுடன் புதிய ஸ்டைலை உறுதிப்படுத்துகிறது. புதிய Brezza SUV ஆனது புதிய கிரில், பம்பர், ஹெட்லேம்ப்கள் மற்றும் பானட் ஆகியவற்றுடன் தட்டையான முகப்பினை பெறுகிறது. பின்புறத்தில், டெயில்கேட் கிடைமட்டமாக ரேப்பரவுண்ட் டெயில்-லேம்ப்களுடன் வரவுள்ளது. புதிய பிரெஸ்ஸா, பக்கவாட்டில் இருந்து பார்க்கும்போது மிதக்கும் கூரை போன்ற தோற்றமளிக்கும்.

9-இன்ச் தொடுதிரை, பயணக் கட்டுப்பாடு, தானியங்கி ஏசி கட்டுப்பாடு மற்றும் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே போன்ற வசதிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பிரெஸ்ஸாவில் 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் ஆப்ஷன் குறைந்த விலை வேரியன்டில் இருக்கலாம்.

புதிய பிரெஸ்ஸா காருக்கு அடுத்த தலைமுறை ஸ்மார்ட் ஹைப்ரிட் K சீரிஸ் எஞ்சினுடன் வரும், இது XL6 உடன் அறிமுகப்படுத்தப்பட்டது. 1.5 லிட்டர், டூயல் ஜெட், டூயல் VVT பெட்ரோல் எஞ்சினாக இருக்கும் என நம்புகிறோம். பவர் 102 bhp மற்றும் 135 Nm முறுக்குவிசையை வழங்குகிறது. மேலும் இது மைல்டு ஹைபிரிட் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. டிரான்ஸ்மிஷன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸால் கையாளப்படும், இருப்பினும், பழைய 4-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் இப்போது பெடல் ஷிஃப்டர்களுடன் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டராக மாற்றப்பட்டுள்ளது.

Exit mobile version