Automobile Tamilan

ரூ.2.39 கோடியில் லெக்சஸ் LC500h விற்பனைக்கு வந்தது

lexus lc500h price in india

இந்தியாவில் லெக்சஸ் வெளியிட்டுள்ள புதிய LC500h ஸ்போர்ட்ஸ் கூபே ரக மாடல் மேம்பட்ட வசதிகள் கொண்டிருக்கின்றது. மற்றபடி, டிசைன் என்ஜின் பவர் தொடர்பான மாற்றங்கள் இல்லாமல் ரூ.10 லட்சம் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

தோற்ற அமைப்பில் மாற்றமில்லை, ஆனால் 21 அங்குல புதிய அலாய் உள்ளது. சக்திவாய்ந்த எல்சி500 ஹெச் ஸ்போர்ட்ஸ் கூபேவில் 300 hp பவரை வெளிப்படுத்தும் 3.5 லிட்டர் என்ஜின் உடன் எலக்ட்ரிக் மோட்டார் பெற்றதாக வந்துள்ளது.

Lexus LC500h

லெக்சஸ் LC500h காரில் வழங்கப்பட்டுள்ள 3.5 லிட்டர், நேச்சரல் ஆஸ்பிரேடடட் V6 பெட்ரோல் என்ஜின் உடன் கூடுலாக மின்சார மோட்டாருக்கு சக்தி வழங்க தானாகவே சார்ஜ் செய்து கொள்ளும் லித்தியம்-அயன் பேட்டரியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

300hp மற்றும் 348Nm வழங்கும் பெட்ரோல் என்ஜினுடன் அதே நேரத்தில் மின்சார மோட்டார் 180hp மற்றும் 330Nm ஆகியவற்றை 354hp ஒருங்கிணைந்த பவர் வழங்குகின்றது. இதில் CVT உடன் 4-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பவர் பின்புற சக்கரங்களுக்கு அனுப்பப்படுகிறது. மேனுவல் முறையில் மொத்தம் 10 கியர் விகிதங்களில் இயக்கலாம். LC500h கார் 0-100kph வேகத்தை 4.7 விநாடிகளில் எட்டிவிடும்.

முந்தைய மாடலை போல அல்லாமல் புதிய LC500h காரில் புதிய 12.3-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி, மேம்பட்ட மென்பொருள் கொண்டு பல்வேறு வசதிகளுடன் கூடிய இன்டிரியரில் மேம்பட்ட வேலைப்பாடுகள் உறுதியான கட்டுமான தரத்துடன், கையால் தைக்கப்பட்ட  இருக்கை உறைகள் மற்றும் நேர்த்தியான கைவினைத்திறன் அம்சங்களை பெற்றுள்ளது.

லெக்சஸ் LC500h விலை ரூ.2.39 கோடி (எக்ஸ்ஷோரூம் இந்தியா)

Exit mobile version