ஆடம்பர எஸ்யூவி மாடல்களில் சிறப்பான வசதிகள் பெற்ற 2023 மெர்சிடிஸ்-பென்ஸ் GLC எஸ்யூவி ரூ.73.5 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் கொண்டதாக வந்துள்ளது.
GLC300 4Matic மற்றும் GLC 220d 4Matic என இருவிதமான என்ஜின் ஆப்ஷன் கொண்டுள்ள ஆடம்பர எஸ்யூவி காரில் 48 வோல்ட் மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் கொண்டதாக உள்ளது. இதில் 9 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
19 அங்குல அலாய் வீல் பெற்ற மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி காரில் முகப்பில் அகலமான கிரில் அமைப்பின் மத்தியில் ஸ்டார் மெர்சிடிஸ்-பென்ஸ் லோகோ இடம்பெற்றுள்ளது. பல்வேறு இடங்களில் க்ரோம் ஃபினீஷ் செய்யப்பட்ட பாகங்கள் கொண்டதாக அமைந்துள்ளது.
11.9-இன்ச் போர்ட்ரெய்ட்-ஸ்டைல் தொடுதிரை மற்றும் 12.3-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர். டேஷ்போர்டில் மேபேக் எஸ்-கிளாஸால் ஈர்க்கப்பட்டுள்ளது. இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் HVAC கட்டுப்பாடுகள் இப்போது தொடுதிரையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. மற்ற அம்சங்களில் காற்று சுத்திகரிப்பு, 360 டிகிரி கேமரா, 64-வண்ண சுற்றுப்புற விளக்குகள், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் நினைவக செயல்பாடு கொண்ட சூடான முன் இருக்கைகள் ஆகியவை பெற்றுள்ளது.
பென்ஸ் GLC 300 காரில் 258hp மற்றும் 400Nm டார்க் வழங்குகின்ற 2.0-லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினை பெறுகிறது. அடுத்து, GLC 220d மாடல் 197hp மற்றும் 440Nm டார்க் வெளிப்படுத்தும் 2.0-லிட்டர் டீசல் என்ஜினைப் பெறுகிறது. இரு இன்ஜின்களும் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் மெர்சிடிஸ் 4மேடிக் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் ஆகியவற்றைப் பெறுகின்றன.
GLC 300 4Matic Rs 73.5 லட்சம்
GLC 220d 4Matic Rs 74.5 லட்சம்