Automobile Tamilan

புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி அறிமுகமானது

new nexon suv

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய நெக்ஸான் 2023 ஆம் ஆண்டிற்கான மாடல் முற்றிலும் மேம்பட்ட டிசைன் வடிவமைப்பினை கொண்டு கூடுதலாக பல்வேறு வசதிகளை பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி முன்பதிவு துவங்கப்பட உள்ள நிலையில், விலை செப்டம்பர் 14 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினில் 4 விதமான கியர்பாக்ஸ் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இரண்டு விதமான கியர்பாக்ஸ் என இரண்டு என்ஜின் ஆப்ஷனில் 6 விதமான கியர்பாக்ஸ் வந்துள்ளது.

2023 Tata Nexon

புதிய நெக்ஸானில் முன்புற தோற்ற அமைப்பில் மிக நேர்த்தியான இரு பிரிவினை கொண்ட ஸ்பிளிட் எல்இடி ஹெட்லேம்ப், ரன்னிங் விளக்குகள், பம்பரின் கீழ் பகுதியில் அகலமான கிரில் கொண்டதாக அமைந்துள்ளது.

பக்கவாட்டில் புதிய அலாய் வீல், பின்புறத்தில் முழுமையான எல்இடி பார் லைட், எல்இடி டெயில் விளக்குகளை பெற்று மிக நேர்த்தியான பம்பர் அமைப்பினை கொண்டதாக அமைந்துள்ளது.

இன்டிரியரில் இரண்டு ஸ்போக் கொண்ட ஸ்டீயரிங் வீல் மத்தியில் ஒளிரும் வகையிலான டாடா லோகோ, ஃப்ரீ-ஸ்டாண்டிங் முறையில் 10.25-இன்ச் தொடுதிரை அம்சம், 10.25 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டரும் பெற்றுள்ளது. மேலும், வயர்லெஸ் சார்ஜர், காற்றோட்டமான முன் இருக்கைகள், காற்று சுத்திகரிப்பு போன்ற வசதிகளும் உள்ளன.

புதிய நெக்ஸான் எஸ்யூவி காரில் பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரை, ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், பின் இருக்கை பயணிகளுக்கான மூன்று புள்ளி சீட் பெல்ட் மற்றும் ISOFIX குழந்தை இருக்கை வசதி, 360 டிகிரி கேமராக்கள், முன்புற பார்க்கிங் சென்சார் மற்றும் பிளைண்ட் வியூ மானிட்டர் ஆகியவை பாதுகாப்பு அம்சத்திற்கு வலு சேர்த்துள்ளது.

நெக்ஸான் என்ஜின் விபரம்

டாடா மோட்டார்ஸ் நெக்ஸான் எஸ்யூவி காரில் அதிகபட்சமாக 120hp பவரையும், 170Nm டார்க் வழங்கும் 1.2-லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. தற்பொழுது 5-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு AMT மற்றும் 7- வேக டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் (க்விக் ஷிஃப்டர்) என 4 கியர்பாக்ஸ்களில் கிடைக்கிறது.

அடுத்தப்படியாக, 115hp பவர் மற்றும் 160Nm டார்க் வெளிப்படுத்தும் 1.5-லிட்டர் டீசல் என்ஜின் ஆனது, 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு AMT உடன் வழங்கப்பட்டுள்ளது.

நெக்ஸான் வேரியண்ட்

முந்தைய மாடலை போன்ற வேரியண்ட் பெயர்கள் நீக்கப்பட்டு புதிதாக, Smart, Smart+, Smart+ (S), Pure+, Pure+ (S), Creative, Creative+, Creative+ (S), Fearless, Fearless (S) மற்றும் Fearless+ (S) போன்ற பெயர்களை கொண்ட வேரியண்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. (S) என்பது சன்ரூஃப் கொண்ட மாடல்களை குறிக்கிறது.

நெக்ஸான் போட்டியாளர்கள்

மாருதி சுசூகி பிரெஸ்ஸா, மஹிந்திரா XUV300, மாருதி சுசூகி ஃப்ரான்க்ஸ், ஹூண்டாய் வென்யூ, கியா சோனெட், ரெனால்ட் கிகர்,மற்றும் நிசான் மேக்னைட் ஆகியவற்றை டாடா நெக்ஸான் எதிர்கொள்ள உள்ளது.

புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி விலை ரூ.8 லட்சம் முதல் ரூ.15 லட்சத்தில் அமையக்கூடும்.. செப்டம்பர் 4, 2023 முன்பதிவு துவங்கப்படும் நிலையில் விற்பனைக்கு செப்டம்பர் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.

2023 Tata Nexon Image Gallery

Exit mobile version