கூடுதல் பாதுகாப்புடன் நிசான் மேக்னைட் எஸ்யூவி அறிமுகம்!

Nissan magnite suv e1677068780335

தொடக்க நிலை எஸ்யூவி சந்தையில் கிகர் காரின் அடிப்படையில் நிசான் தயாரித்த மேக்னைட் சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளது. கூடுதலாக டிராக்‌ஷன் கட்டுப்பாடு, ஸ்டெபிளிட்டி கட்டுப்பாடு, டயர் அழுத்த மானிட்டர், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் என பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் அடிப்படையாக சேர்க்கப்பட்டுள்ளது.

2023 Nissan Magnite

குறைந்த நிலை XE வேரியண்ட் தொடங்கி அனைத்து வேரியண்டுகளிலும் இப்பொழுது டிராக்‌ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டம், டயர் பிரஷர் மானிட்டர், ஹில் ஸ்டார்ட் அசிஸ்டென்ஸ், ஆகியவற்றை கொடுத்துள்ளது. முன்பாக இந்த வசதிகள் டர்போ பெட்ரோல் மற்றும் டாப் வேரியண்டுகளில் மட்டும் சேர்க்கப்பட்டிருந்தது.

பாதுகாப்பு சம்பந்தப்பட்ட இடத்தில் நிசான் ஏற்கனவே சிறப்பான அடித்தளத்தை அமைத்துள்ளது. இது GNCAP சோதனைகளிலும்  4-நட்சத்திரங்களை பெற்றிருந்தது. பிற நிலையான அம்சங்கள் பின்புற டிஃபோகர் மற்றும் பின்புற வாஷர் மற்றும் வைப்பர் ஆகியவை இடம் பெற்றுள்ளது.

புதிய மாசு விதிகளுக்கு ஏற்ப RDE விதிமுறைகளை பூர்த்தி செய்துள்ள என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. 100 hp பவரை 5,000rpm மற்றும் 160 Nm டார்க் 2,800-3,600 rpm-ல் (152Nm – CVT) வழங்குகின்ற 1.0 லிட்டர் HRA0 டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

சாதாரன 1.0 லிட்டர் B4D பெட்ரோல் இன்ஜின் 72hp பவரை 6,250rpm-லும், 96 Nm டார்க்கினை 3,500rpm-ல் வழங்கக்கூடிய மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் உள்ளது.

விற்பனையில் உள்ள மேக்னைட் காரை விட ரூ.20,500 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

Exit mobile version