2023 ஃபோக்ஸ்வேகன் விர்டஸ் மற்றும் டைகன் அறிமுகம்

இந்திய சந்தையில் கிடைக்கின்ற ஃபோக்ஸ்வேகன் விர்டஸ் செடான் காரில் புதிய 1.5 L பெட்ரோல் என்ஜினில் கூடுதலாக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் டைகன் எஸ்யூவி காரில் ஜிடி MT பிளஸ் மற்றும் ஜிடி DSG என இரண்டு வேரியண்டுகள் மற்றும் ட்ரையில் சிறப்பு எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய வேரியண்டுகள் மற்றும் மாடல்களின் விலை ஜூன் மாதம் அறிவிக்கப்பட உள்ளது. லாவா ப்ளூ நிறம் அனைத்து வேரியண்டிலும் கூடுதலாக ஜிடி லிமிடெட் எடிசன், டைகன் ஸ்போர்ட் மற்றும் ட்ரையில் எடிசன் வருகின்றது.

2023 Volkswagen Taigun & Virtus

150hp பவர் மற்றும் 250Nm டார்க் வழங்குகின்ற 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் DSG என இரண்டிலும் கிடைக்கும். டைகன் எஸ்யூவி மாடலில் இரண்டு புதிய வகைகளையும் பெற்றுள்ளது . அவை GT Plus MT மற்றும் GT DSG ஆகும்.

GT எட்ஜ் லிமிடெட் மாடல் பிரத்தியேகமான டீப் பிளாக் பேர்ல் ஃபினிஷ் கொண்ட விர்டஸ் ஜிடி பிளஸ் வேரியண்டில் கிடைக்கும். டீப் பிளாக் பேர்ல் மற்றும் கார்பன் ஸ்டீல் மேட் ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் ஜிடி பிளஸ் வகைகளுடன் கூடிய ஜிடி எட்ஜ் லிமிடெட் எடிசனை டைகன் பெறுகிறது.

ஜிடி எட்ஜ் லிமிடெட் தவிர ஸ்போர்ட் மற்றும் டிரெயில் என இரண்டு சிறப்பு எடிசன் மாடல்களையும் காட்சிப்படுத்தியுள்ளது. இந்த கார்களில் தோற்ற அமைப்பில் பாடி ஸ்டிக்கிரிங் பெற்றதாக அமைந்துள்ளது.

Share