Automobile Tamilan

சோதனை ஓட்டத்தில் மாருதியின் டிசையர் அறிமுகம் எப்பொழுது..!

maruti suzuki dzire spotted

இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற செடான் மாடல்களில் முதன்மையாக உள்ள மாருதி சுசூகியின் டிசையர் செடான் காரின் சாலை சோதனை ஓட்ட படங்கள் முதன்முறையாக வெளியாகியுள்ளது.

ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ள நான்காம் தலைமுறை மாருதி சுசூகி ஸ்விஃப்ட் காரின் அடிப்படையில் தயாரிக்கப்பட உள்ள டிசையர் காரில் பல்வேறு மேம்பாடுகள் பெற்றிருக்கும்.

2024 Maruti Swift Dzire

வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற ஸ்விஃப்ட் காரை தொடர்ந்து டிசையர் உடனடியாக விற்பனைக்கு வெளியாக வாய்ப்புள்ளது. தோற்ற அமைப்பில் ஜப்பானிய சந்தையில் வெளியிடப்பட்ட ஸ்விஃப்ட் காரை போலவே அமைந்திருக்க உள்ள டிசையர் முன்புறத்தில் புதுப்பிகப்பட்ட கிரில் மற்றும் நேரத்தியான ஹெட்லைட் அமைப்பினை கொண்டுள்ளது.

பக்கவாட்டில் புதுப்பிக்கப்பட்ட 5 ஸ்போக் கொண்ட அலாய் வீல் மற்றும் டிசைனில் எந்த மாற்றமும் இல்லால் வரக்கூடும். பின்புறத்தில் தொடர்ந்து தற்பொழுது உள்ள டிசையரை போன்றே செடானுக்கு உரித்தான அம்சங்கள் புதிய எல்இடி டெயில் லைட் பெற்றதாக உள்ளது.

இன்டிரியரில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்விஃப்ட்டை போலவே டிசையரும் டேஸ்போர்டில் கருப்பு மற்றும் பீஜ் கலவை கொண்டதாகவும், சாலை சோதனை ஓட்டத்தில் உள்ள 360 டிகிரி வியூ கேமரா மானிட்டரும் இடம்பெற்றுள்ளது.  9 அங்குல தொடுதிரை ஃபீரீ ஸ்டாண்டிங் இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு, அனலாக் முறையிலான டயல் பெற்ற MID டிஸ்ப்ளேவைப் பெறுகிறது மற்ற அம்சங்களில், க்ரூஸ் கண்ட்ரோல், ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட பட்டன்கள், புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் ஆட்டோமேட்டிக் ஏசி ஆகியவை பெற்றிருக்கலாம்.

தற்பொழுது உள்ள 4 சிலிண்டர் என்ஜினுக்கு மாற்றாக புதிய 3 சிலிண்டர் Z12E பெட்ரோல் என்ஜின்  5,700rpm சுழற்சியில் 82hp, மற்றும் 4,500rpm சுழற்சியில் 108Nm டார்க் வழங்குகின்றது. மைல்டு ஹைபிரிட் பெற  DC சிங்கோரேனஸ் மோட்டாரிலிருந்து 3.1hp மற்றும் 60Nm டார்க் வழங்குகின்றது.

WLTP சோதனை முறையில் மைலேஜ் தொடர்பாக ஹைபிரிட் அல்லாத வேரியண்ட்  23.4kpl மற்றும் ஹைபிரிட் வேரியண்ட் 24.5kpl ஆக சான்றியளிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் 5 வேக மேனுவல் மற்றும் ஏஜிஎஸ் கியர்பாக்ஸ் கொண்டிருக்கலாம்.

மார்ச் அல்லது ஏப்ரல் மாத இறுதியில் சுசூகி ஸ்விஃப்ட் குஜராத்தில் உள்ள ஆலையில் உற்பத்தி துவங்க திட்டமிட்டுள்ளதால், அதனை தொடர்ந்து மாருதி டிசையர் காரும் விற்பனைக்கு அடுத்த மூன்று முதல் நான்கு மாதங்களுக்குள் விற்பனைக்கு வெளியிடப்படலாம்.

Exit mobile version