Automobile Tamilan

2024 மாருதி சுசூகி டிசையர் அறிமுக விபரம் வெளியானது

maruti dzire

மாருதி சுசூகி ஸ்விஃப்ட் அடிப்படையில் விற்பனை செய்யப்படுகின்ற டிசையர் செடான் காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் விற்பனைக்கு 2024 ஆம் ஆண்டின் மத்தியில் வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளது.

புதிய மாருதி ஸ்விஃப்ட் கான்செப்ட் ஜப்பான் மோட்டார் அரங்கில் வெளியிடப்பட்டதை தொடர்ந்து இந்திய சந்தையில் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் விற்பனைக்கு அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் வெளியிடப்படலாம்.

2024 Maruti Suzuki Dzire

புதிய ஸ்விஃப்ட் காரின் அடிப்படையில் வரவுள்ள டிசையர் செடானில் என்ஜின் உட்பட பல்வேறு மாற்றங்கள் பெற உள்ளது. குறிப்பாக விற்பனையில் உள்ள மாடலில் இடம்பெற்றுள்ள 4 சிலிண்டர் K12 பெட்ரோல் என்ஜினுக்கு பதிலாக புதிய 3 சிலிண்டர் என்ஜின் வெளியாக உள்ளது.

புதிய மூன்று சிலிண்டர் Z12E பெட்ரோல் என்ஜின் பவர் மற்றும் டார்க் விபரங்கள் அறிவிக்கப்படவில்லை. ஆனால் தற்பொழுது கிடைக்கின்ற மாடலை விட கூடுதலாக 90 hp-100 hpக்குள் பவர் மற்றும் 150NM டார்க் வெளிப்படுத்தக்கூடும். சர்வதேச சந்தையில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி என இரு விதமான ஆப்ஷனை பெற உள்ளது.

இந்திய சந்தைக்கு சிவிடி கியர்பாக்ஸ் மாடலுக்கு பதிலாக ஏஜிஎஸ் எனப்படும் ஏஎம்டி கியர்பாக்ஸ் வழங்கப்படலாம்.

புதிய ஸ்விஃப்ட் மாடலின் ஸ்விஃப்ட் காரின் இன்டிரியரில் உள்ளதை போலவே முழுமையான கருப்பு நிறத்துடன் சிறிய அளவிலான வெள்ளை என இரட்டை நிறத்தை பெற்ற புதிய டாஷ்போர்டு பெற்று 9 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்று க்ரூஸ் கண்ட்ரோல், ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட பட்டன்கள், புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் ஆட்டோமேட்டிக் ஏசி ஆகியவை அடங்கும்.

புதிய மாருதி சுசூகி டிசையர் காரில் ADAS போன்ற உயரிய பாதுகாப்பு அம்சங்களை பெற்றாலும், இந்தியாவில் இந்த வசதியை பெறுவதற்கு வாய்ப்புகள் இல்லை. அடிப்படையான பாதுகாப்பில் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் 6 ஏர்பேக்குகள் வழங்குவதன் மூலம் பாதுகாப்பை அதிகரிக்கலாம்.

இந்தியாவில் புதிய மாருதி டிசையர் செடானை 2024 ஆம் ஆண்டின் பண்டிகை காலத்துக்கு முன்பாக விற்பனைக்கு அறிமுகம் செய்ய வாய்ப்புகள் உள்ளது.

 

Exit mobile version