Automobile Tamilan

2024 மாருதி சுசூகி வேகன் ஆர் காரின் ஸ்பை படங்கள் வெளியானது

2024 maruti suzuki wagon r spied

மாருதி சுசூகி நிறுவனத்தின் துவக்க நிலை டால்பாய் ஹேட்ச்பேக் வேகன் ஆர் காரின் 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற படங்கள் முதன்முறையாக வெளியாகியுள்ளது.

2024 ஆம் ஆண்டில் மாருதி புதிய ஸ்விஃப்ட், டிசையர் கார் உட்பட பல்வேறு ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் எதிர்பார்க்கப்படும் நிலையில் வேகன்ஆர் விற்பனைக்கு வெளியாகுவது உறுதியாகியுள்ளது.

2024 Maruti Suzuki WagonR

சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டுள்ள மாடலின் பின்புற படங்கள் வெளியாகியுள்ள நிலையில் புதுப்பிக்கப்பட்ட பம்பர் மற்றும் டெயில் லைட் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மற்றபடி, இன்டிரியர் உட்பட முன்பக்க தோற்ற அமைப்பினை பற்றி எந்த படமும் வெளியாகவில்லை.

இந்த மாடல் வேகன்ஆர் ஏற்கனவே எலக்ட்ரிக் காரின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட மாடலை போலவே உள்ள நிலையில் சோதனை ஓட்டத்தில் உள்ள மாடல் பெட்ரோல் மாடலாகும். வேகன்ஆர் திட்டத்தை மாருதி ஏற்கனவே கைவிடப்பட்டது.

வேகன் ஆர் ஃபேஸ்லிஃப்ட் காரில் 1.0-லிட்டர், 3-சிலிண்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் மற்றும் புதிய ஸ்விஃப்ட் காரில் இடம்பெற்றிருக்கின்ற 1.2-லிட்டர் 3-சிலிண்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் விருப்பங்களைப் பெறும். இது அதே மேனுவல் மற்றும் AMT கியர்பாக்ஸ் விருப்பங்களுடன் கிடைக்கும். மாருதி சுசூகி சிஎன்ஜி விருப்பத்துடன் வரக்கூடும்.

விற்பனைக்கு புதிய மாருதி வேகன்ஆர் 2024 ஆம் ஆண்டின் மத்தியில் எதிர்பார்க்கலாம்.

image source – instagram/uk_gupta97

Exit mobile version