Automobile Tamilan

2024 மினி கண்ட்ரிமேன் எஸ்யூவி அறிமுகமானது

mini countryman suv

மினி கார் தயாரிப்பாளர் மூன்றாம் தலைமுறை கண்டரிமேன் எஸ்யூவி மாடலில் ICE மற்றும் EV என இரண்டையும் IAA மொபைலிட்டி எனப்படுகின்ற முனீச் மோட்டோ ஷோ அரங்கில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவிற்கு அடுத்த ஆண்டு வரவிருக்கும் கண்டரிமேன் எஸ்யூவி முந்தைய மாடலை விட 60மிமீ உயரம் மற்றும் 130மிமீ நீளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

2024 Mini Countryman

முற்றிலும் புதிப்பிக்கப்பட்ட தோற்ற அமைப்பினை பெற்றுள்ள கண்ட்ரிமேன் எஸ்யூவி காரில் முன்புற கிரில் அமைப்பு, ஹெட்லைட், பம்பர் ஆகியவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பின்பக்கத்தில் புதிய டெயில் லைட் மற்றும் பம்பர் பெற்றுள்ளது.

இன்டிரிரில் மினி கூப்பர் எலக்ட்ரிக் போலவே வளைந்த டாஷ்போர்டில் 9.4-இன்ச் OLED இன்ஃபோடெயின்மென்ட் தொடுதிரை அமைப்பு உள்ளது. இந்த சிஸ்டத்தினை பெற்றுள்ளது.

மினி கண்ட்ரிமேன் காரின் மூலம் முதன்முறையாக மினி தனது கார்களில் நிலை 2 (Level 2 ADAS) தன்னாட்சி இயக்கி உதவி அமைப்புகள், 60கிமீ வேகத்தில் செமி தன்னாட்சி ஓட்டுதலை வழங்குகின்றது.

ICE மற்றும் EV இரண்டு பதிப்புகளும் மூன்று இன்டீரியர் டிரிம்கள் மற்றும் எட்டு மினி எக்ஸ்பீரியன்ஸ் மோடுகளுடன் வந்துள்ளது.

கண்ட்ரிமேன் எலக்ட்ரிக்

இரண்டும் 66.45kWh பேட்டரியை பெற்றுள்ள E மற்றும் SE  வேரியண்டுகள், ஒற்றை-மோட்டார் மூலம் 204hp பவர் மற்றும் 250Nm டார்க் உடன் ரியர்-வீல்-டிரைவ் கன்ட்ரிமேன் E பெற்றுள்ளது. 8.6 வினாடிகளில் மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டுவதுடன் அதிகபட்ச வேகம் மணிக்கு 170 கிமீ எட்டும். முழுமையான சிங்கிள் சார்ஜில் 462km பயணிக்கலாம்.

கண்ட்ரிமேன் SE ஆனது 313hp பவர் மற்றும் 494Nm டார்க் வெளிப்படுத்துகின்ற டூயல்-மோட்டாருடன் 4 வீல் டிரைவ் பெற்றள்ளது. 0-100 கிமீ எட்ட 5.6 வினாடிகள் மட்டுமே மற்றும் அதிகபட்ச வேகம் மணிக்கு 180 கிமீ வேகத்தை எட்டும். முழுமையான சிங்கிள் சார்ஜில் 433km பயணிக்கலாம். மேலும் இரண்டையும் 130kW சார்ஜரை கொண்டு சார்ஜ் செய்யலாம்.

கண்ட்ரிமேன் ICE

பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் கிடைக்க உள்ளது. ஆனால் டீசல் என்ஜின் விபரம் வெளியிடப்படவில்லை.

C மாடலில் 169hp பவர் வெளிப்படுத்தும்1.5-லிட்டர் டர்போசார்ஜ்டு டிரிபிள் முன்புற டிரைவ் கொண்டுள்ளது. 2.0-லிட்டர் டர்போசார்ஜ் S All4 வேரியண்ட் 218hp பவர் வெளிப்படுத்தும் மற்றும் ஜான் கூப்பர் ஒர்க்ஸ் (JCW) All4 ஆனது 5.4 வினாடிகளில் 0-100kph நேரத்திற்கு 300hp மற்றும் 400Nm ட்யூனில் அதே 2.0-லிட்டர் என்ஜினை பெறுகிறது.

Exit mobile version