Automobile Tamilan

ரூ.49.92 லட்சத்தில் இந்தியாவில் நிசானின் X-Trail எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்

4t gen nissan x trail

7 இருக்கை பெற்ற நிசான் நிறுவனத்தின் 2024 X-Trail எஸ்யூவி ரூ.49.92 லட்சம் விலையில் விற்பனைக்கு இந்திய சந்தையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாடலில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மட்டும் கிடைக்கின்றது.

CBU வகையில் முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்படுகின்றது. X-Trail மாடலுக்கு 3 வருட அல்லது 1 லட்சம் கிமீ உத்தரவாதத்தை வழங்குகிறது, மேலும் மூன்று வருட இலவச சாலையோர உதவியையும் வழங்குகிறது.

163PS மற்றும் 300Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 12v மைல்டு ஹைபிரிட் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மூன்று சிலிண்டர் என்ஜின் மட்டும் பொருத்தப்பட்டிருக்கும். இதில் சிவிடி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கின்றது.

13.7kmpl மைலேஜ் என்று கூறப்படுகின்ற நிலையில் இந்த மாடல், 9.6 வினாடிகளில் 0-100kmph வேகத்தை எட்டும் திறனை கொண்டுள்ளதாக நிசான் உறுதிப்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு தொடர்பான அம்சங்களில் ஏழு ஏர்பேக்குகள், தானியங்கி வைப்பர்கள், EBD உடன் ஏபிஎஸ், டிராக்ஷன் கட்டுப்பாடு, லிமிடெட் ஸ்லிப் டிஃபெரன்சியல், ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் முன்பக்க பார்க்கிங் சென்சார்கள் ஆகியவற்றைப் பெறுகிறது.

12.3 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டர் மற்றும் 12.3 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் கனெக்ட்டிவிட்டி அம்சங்களுடன் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், கீலெஸ் என்ட்ரி மற்றும் புஷ்-பட்டன் ஸ்டார்ட், 360 டிகிரி கேமரா உடன் சரவுண்ட் வியூ மாணிட்டர் மற்றும் பேடல் ஷிஃப்டர் உள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோக்ஸ்வேகன் டிகுவான், ஸ்கோடா கோடியாக் , ஹூண்டாய் டூஸான் உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ளுவதுடன் ஜீப் மெர்டியன் எஸ்யூவிகளை நிசான் X-Trail எதிர்கொள்ளும்.

Exit mobile version