₹ 4.70 லட்சத்தில் 2024 ரெனால்ட் க்விட் விற்பனைக்கு அறிமுகமானது

new Renault kwid 2024

ரெனால்ட் இந்தியா நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டிற்கான க்விட் ஹேட்ச்பேக் காரை விற்பனைக்கு ரூ.4.69 லட்சம் முதல் ரூ.6.44 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக வந்துள்ள க்விட் காரில் டூயல் டோன் நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு தொடுதிரை வசதியுடன் கூடிய இன்ஃபோடெயின்மெனெட் சிஸ்டத்தை இணைத்துள்ளது.

அடுத்த 3 ஆண்டுகளுக்குள் ரெனால்ட் இந்தியா புதிய தலைமுறை க்விட், கிகர், ரெனோ டஸ்ட்டர், 7 இருக்கை பெற்ற பிக்ஸ்டெர் மற்றும் ஒரு எலக்ட்ரிக் காரை வெளியிட திட்டமிட்டுள்ளது.

Renault Kwid 2024

இந்திய சந்தையில் கிடைக்கின்ற குறைந்த விலை கொண்ட கார்களில் ஒன்றான ரெனால்ட் க்விட் ஹேட்ச்பேக் மாடலில் தொடர்ந்து 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பெற்றுள்ளது.

5,500rpmல் 68 bhp பவர் மற்றும் 91 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் SCe பெட்ரோல் என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. ரெனோ க்விட் 1.0லி மைலேஜ் லிட்டருக்கு 23.07 கிலோமீட்டர் ஆகும்.

புதிய க்விட் 2024 மாடலில் இடம்பெற்றுள்ள வேரியண்டுகளில் 14க்கு மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், ரியர் சீட் பெல்ட் நினைவூட்டல், 8 அங்குல மீடியாநேவ் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மூலம் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே பெற்றுள்ளது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற ஆட்டோமேட்டிக் கார்களில் RXL (O) வேரியண்ட் மிக குறைந்த விலை மாடலாகும். முந்தைய 2023 மாடலை விட ரூ.17,000 முதல் ரூ.20,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

  • Renault Kwid RXE – ₹ 4,69,500
  • Renault Kwid RXL (O) – ₹ 4,99,500
  • Renault Kwid RXL (O) – ₹ 5,44,500
  • Renault Kwid RXT- ₹ 5,50,500
  • Renault Kwid RXT AMT – ₹ 5,95,500
  • Renault Kwid Climber- ₹ 5,87,500
  • Renault Kwid Climber AMT – ₹ 6,12,500

இந்நிறுவனம், க்விட், கிகர் மற்றும் ட்ரைபர் ஆகிய மூன்று மாடல்களை மேம்படுத்தி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.