Automobile Tamilan

இந்தியா வரவிருக்கும் ஃபோர்டு எண்டேவர் எஸ்யூவி அறிமுக விபரம்

ஃபோர்டு எண்டேவர் எஸ்யூவி

இந்தியாவில் மீண்டும் ஃபோர்டு நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்ய வாய்ப்பு உள்ள நிலையில் எண்டேவர் எஸ்யூவி பற்றி முக்கிய விபரங்களை தொகுத்து முழுமையாக அறிந்து கொள்ளலாம்.

பல்வேறு நாடுகளில் எவரெஸ்ட் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகின்ற இந்தியாவில் எண்டேவர் எஸ்யூவி என விற்பனை செய்யப்பட்ட மாடல் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலை ஃபோர்டு இந்தியாவின் சென்னை தொழிற்சாலை விற்பனை முடிவை கைவிட்ட நிலையில் எண்டோவர் உட்பட பல்வேறு டிசைன் அம்சங்களுக்கு காப்புரிமை பெற்றுள்ளது.

Ford Endeavour or Everest

சர்வதேச அளவில் 2.0 லிட்டர் டர்போ டீசல், 2.0 லிட்டர் பை டர்போ டீசல் மற்றும் 3.0 லிட்டர் V6 டர்போ டீசல் என மூன்று விதமான ஆப்ஷனை பெற்றுள்ளது.

இதில் 6 வேக ஆட்டோமேட்டிக் அல்லது 10 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்று 4×2 மற்றும் 4×4 என இரு விதமான ஆப்ஷனிலும் எண்டோவர் எஸ்யூவி கிடைக்கின்றது.

170 PS வெளிப்படுத்துகின்ற 2.0 லிட்டர் டர்போ டீசல் மாடல் 405 N-m டார்க் வெளிப்படுத்துகின்ற எஞ்சினில் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸூடன் 4×2 பெற்றதாக விற்பனையில் உள்ளது.

210 PS பவர் 2.0 லிட்டர் பை-டர்போ டீசல் மாடல் 500 N-m டார்க் வெளிப்படுத்துகின்ற எஞ்சினில் 10 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் 4×2 மற்றும் 4×4 ஆப்ஷனை பெற்றதாக கிடைக்கின்றது.

இறுதியாக, மிகவும் சக்திவாய்ந்த 3.0 லிட்டர் V6 டர்போ டீசல் பெறுகின்ற எண்டோவரில் 250 PS பவர் மற்றும் 500 N-m டார்க் உற்பத்தி செய்கின்றது.

இந்த டாப் 3.0 லிட்டர் வேரியண்டில் 10 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் 4×2 மற்றும் 4×4 ஆப்ஷனை பெற்றதாக கிடைக்கின்றது.

18 அங்குல வீல் அல்லது டாப் வேரியண்டுகளில் 20 அங்குல வீல் அல்லது ஒரு சில நாடுகளில் 21 அங்குல வீல் பெற்றதாக உள்ளது.

இந்த எஸ்யூவி மாடலில் 7 இருக்கை பெற்று உயர்தர கட்டுமானத்தை கொண்டு 7 ஏர்பேக்குகளை பெற்றுள்ளது.

12 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்று பல்வேறு கனெக்ட்டிவிட்டி அம்சங்களுடன் வயர்லெஸ் சார்ஜர், கீலெஸ் என்ட்ரி பெற்றுள்ளது.

சென்னை உள்ள ஆலையை புதுப்பித்து ஃபோர்டு எண்டேவர் எஸ்யூவி தயாரிக்கப்பட உள்ளதால் மிகவும் சவாலான விலையில் விற்பனைக்கு 2025 ஆம் ஆண்டின் மத்தியில் ரூ.35-40 லட்சத்தில் வரவுள்ளது.

இந்தியாவில் கிடைக்கின்ற டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி உட்பட எம்ஜி குளோஸ்டெர் ஆகிய பிரீமியம் எஸ்யூவிகளை எதிர்கொள்ள உள்ளது.

Exit mobile version