Automobile Tamilan

2025 ஹோண்டா எலிவேட்டில் இன்டீரியர் மேம்பாடு மற்றும் கூடுதல் வசதிகள்

2025 Honda Elevate

ஹோண்டா நிறுவனத்தின் எலிவேட் எஸ்யூவி மாடலில் புதுப்பிக்கப்பட்ட ஆப்ஷனல் கிரில் மற்றும் டாப் ZX வேரியண்டில் ஐவரி நிறத்துடன் கருப்பு என டூயல் டோன் கொண்ட இன்டீரியர் வழங்கப்பட்டுள்ள நிலையில் ரூ.11.19 லட்சம் முதல் ரூ.15.71 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) விலை அமைந்துள்ளது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு மேம்பட்ட சில வசதிகளை பெற்றுள்ள எலிவேட்டில் தொடர்ந்து 1.5 லிட்டர், 4 சிலிண்டர் i-VTEC பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு 121hp மற்றும் 145Nm டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில் 6 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் உள்ளது.

V , VX என இரு வேரியண்டிலும் கருப்பு ஃபேபரிக் அப்ஹோல்ஸ்ட்ரியுடன் ஐவரி இன்ஷர்ட்கள் இடம்பெற்றுள்ள நிலையில், பிளாக் எடிசனில் முன்பக்க கிரிலில் க்ரோம் பூச்சு உள்ள நிலையில், சிக்னேச்சர் பிளாக் எடிசனில் கருமை நிறத்துக்கு முக்கியத்துவம் கிரில் உள்ளது. கூடுதலாக V, VX மற்றும் ZX கிரிஸ்டல் பிளாக் கலர் ஆப்ஷனை பெற்றதாக வந்துள்ளது. ZX வகையில் 360 டிகிரி கேமரா மற்றும் ஆம்பியன்ட் லைட்டிங் ஆப்ஷனலாக உள்ளது.

மற்றபடி வசதிகளில் எவ்விதமான மாற்றங்களும் இல்லாமல் தொடர்ந்து 6 ஏர்பேக்குளுடன் டாப் வேரியண்டில் ADAS சார்ந்த வசதிகளுடன் கிடைக்கின்றது.

2025 Honda Elevate price

(எக்ஸ்-ஷோரூம்)

Exit mobile version