புதுப்பிக்கப்பட்ட விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ நியோ எஸ்யூவி மாடல் பாக்ஸ் வடிவமைப்பினை பெற்றதாக விளங்குவதுடன் 4 மீட்டருக்குள் அமைந்துள்ளதால் ஆரம்ப விலை ரூ.8.49 லட்சம் முதல் ரூ.9.99 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பொலிரோ நியோ மட்டுமல்லாமல் மஹிந்திராவின் பிரசத்தி பெற்ற எஸ்யூவி பொலிரோ மாடலும் புதுப்பிக்கப்பட்ட பல்வேறு அம்சங்களை கொண்டதாக விற்பனைக்கு வந்துள்ளது.
Mahindra Bolero Neo
பொலிரோ நியோவில் தொடர்ந்து 1.5 லிட்டர் டீசல் எம்-ஹாக் 100 என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்ச பவர் 100hp மற்றும் 260Nm டார்க் வெளிப்படுகின்ற நிலையில் இந்த மாடலிலும் 5 வேக மேனுவல் மட்டும் வழங்கப்படுகின்றது.
2025 Bolero Neo variant-wise prices
Variant | New Price |
N4 | ₹ 8.49 lakh |
N8 | ₹ 9.29 lakh |
N10 | ₹ 9.79 lakh |
N11 | ₹ 9.99 lakh |
புதிதாக ஜீன்ஸ் ப்ளூ மற்றும் கான்கிரீட் கிரே என இரண்டு நிறத்துடன் தற்போதுள்ள டயமண்ட் ஒயிட், ஸ்டெல்த் பிளாக், பேர்ல் ஒயிட் மற்றும் ராக்கி பீஜ் ஆகியவையும், டூயல் டோன் எனப்படுகின்ற இரட்டை வண்ண விருப்பங்களும் இப்போது கிடைக்கின்றன.
வெளிப்புறத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 16 அங்குல அலாய் வீலினை பெற்று மிக நேர்த்தியான முன்பக்க கிரில் மாற்றப்பட்டு செங்குத்தான ஸ்லாட்டுகளுடன் கூடுதலாக கிடைமட்டத்தில் கிரில் மாற்றப்பட்டுள்ளது. பின்பக்கத்தில் ஸ்பேர் வீல் கவர் மாற்றப்பட்டுள்ளது.
இன்டீரியரில் வேரியண்டை பொறுத்து லூனார் கிரே அல்லது மோச்சா பிரவுன் நிறத்தை பெற்று 9-அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் கூடுதலாக ஆண்ட்ராய்டு ஆட்டோ & கார்ப்ளே ஆதரவினை, USB Type-C போர்ட் பெற்று ரிவர்ஸ் கேமராவையும் கொண்டுள்ளது.
பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து இரண்டு ஏர்பேக்குகளை மட்டுமே பெற்றுள்ள பொலிரோ நியோவில் கரடுமுரடான சாலைகளில் மென்மையான பயண அணுபவத்தை வழங்க அதிர்வுகளை குறைக்க டம்பர்கள். சிறந்த ஆஃப்-ரோடு திறன்களுக்காக விருப்பமான மல்டி-லாக்கிங் டிஃபெரன்ஷியலுடன் கூடியதாக வந்துள்ளது.