Automobile Tamilan

2025 மாருதி சுசூகி டிசையர் விற்பனைக்கு வெளியானது..!

all new 2025 maruti suzuki dzire

ரூ.6.79 லட்சம் முதல் ரூ. 10.14 லட்சம் வரையிலான விலையில் நான்காம் தலைமுறை 2025 ஆம் ஆண்டிற்கான மாருதி சுசூகி டிசையர் செடான் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள நிலையில் உடனடியாக டெலிவரி துவங்கப்பட உள்ளது.

புதிய டிசையர் மற்றும் ஸ்விஃப்ட் என இரண்டும் முற்றிலும் மாறுபட்ட டிசைன் அமைப்பினை பெற்று மிக பிரீமியம் தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள டிசையரில் முன்பக்கத்தில் கிடைமட்டமான கிரிலுடன் மிக நேர்த்தியான எல்இடி ரன்னிங் விளக்குடன் இணைப்பாக வழங்கப்பட்டுள்ள க்ரோம் பட்டை, எல்இடி ஹெட்லைட், கீழ்பகுதியில் பம்பரில் உள்ள ஃபோக் லேம்ப் என மிக நேர்த்தியாக உள்ளது.

பக்கவாட்டில் மிக நேர்த்தியான சி பில்லர் பகுதியில் உள்ள ரூஃப் ஸ்லோப்பிங் உடன் மேற்கூறையில் சிங்கிள் பேன் சன்ரூஃப், ஷார்க் ஃபின் ஆண்டனா பெற்று 15 அங்குல டைமண்ட் கட் அலாய் வீலை பெற்றுள்ளது.  பின்புறத்தில் பூட்லிப் ஸ்பாய்லருடன் மிக நேர்த்தியான எல்இடி டெயில்லைட் பெற்றுள்ளது.

இன்டீரியரில் டிசையர் மற்றும் ஸ்விஃப்ட் என இரண்டும் ஒரே மாதிரியாக வடிவமைப்பினை பகிர்ந்து கொண்டாலும், க்ரோம் பட்டை மற்றும் போலியான வூட் ஃபினிஷ் கூடுதல் கவர்ச்சியை டிசையருக்கு தருகின்றது.

மற்றபடி, 360 டிகிரி கேமரா, MID கிளஸ்ட்டருடன் 9 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை பெற்றுள்ளது. குறைந்த விலை வேரியண்டுகளில் 7 அங்குல சிஸ்டம் உள்ளது.

டிசையர் எஞ்சின் விபரம்

1.2 லிட்டர் Z12E மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்றது. இதன் பவர் அதிகபட்சமாக 81.6 PS மற்றும் 112 Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் 5 வேக  மேனுவல் மற்றும் 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் இடம் பெற்றுள்ளது.

டிசையர் காரின்  மைலேஜ் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற மாடல் 24.79Kmpl மற்றும் 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் உள்ள 25.71 Kmpl வெளிப்படுத்தும் என ARAI தெரிவித்துள்ளது.

சிஎன்ஜி ஆப்ஷனில் வரும்பொழுது பவர் 69bhp மற்றும் 102Nm டார்க் வழங்கி ஐந்து ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே வழங்கப்பட உள்ளது.  சிஎன்ஜி காரில் 5 வேக மேனுவல் பொருத்தப்பட்ட மாடல் 33.73 Km/kg வழங்கும் என ARAI உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

டிசையர் காரி்ன் அளவுகள் 3,995மிமீ நீளம், 1,735மிமீ அகலம் மற்றும் 1,525மிமீ உயரம், 2,450மிமீ வீல்பேஸ் மற்றும் 163மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டு 382 லிட்டர் பூட்ஸ்பேஸ் கொண்டுள்ளது.

குளோபல் கிராஷ் டெஸ்ட் முடிவு

சர்வதேச NCAP மையத்தால் சோதனை செய்யப்பட்டுள்ள புதிய டிசையர் வயது வந்தோர் பாதுகாப்பில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்று  34 புள்ளிகளுக்கு 31.24 புள்ளிகளை பெற்று அசத்தியுள்ளது. அடுத்து குழந்தைகளுக்கு பெறவேண்டிய 49 புள்ளிகளுக்கு 39.20 புள்ளிகளை மட்டும் பெற்றுள்ளது இதன் காரணமாக நான்கு ஸ்டார் ரேட்டிங் குழந்தைகளுக்கு பெற்றுள்ளது.

2024 டிசையர் மாடலில் LXi, VXi, VXi (O), ZXi, மற்றும் ZXi+ என 5 விதமான வேரியண்ட்டை பெற்றுள்ளது.

ஆறு ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, TPMS, இஎஸ்பி, ஏபிஎஸ் உடன் இபிடி மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார் இடம்பெற்றிருக்கின்றது.

2024 Maruti Suzuki Dzire Price list

(All Price Ex-showroom)

Exit mobile version