Automobile Tamilan

ஆடி Q3, Q3 Sportback போல்டு எடிசன் விற்பனைக்கு வெளியானது

Audi Q3 Sportback Bold Edition

ஆடி இந்தியாவில் வெளியிட்டுள்ள கருமை நிறத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ள புதிய Q3, Q3 Sportback போல்டு எடிசன் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

4WD ஆப்ஷனை பெறுகின்ற Q3 மற்றும் Q3 ஸ்போர்ட்பேக் போல்டு என இரு மாடலிலும் 190hp, 320Nm, 2.0-லிட்டர், நான்கு சிலிண்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் 7-ஸ்பீடு DCT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது,

முன்பக்க கிரிலில் கருமை நிறத்தை பெற்று, முன்பக்கத்தில் பம்பரில் அகலமான கிரில், ரூஃப்ரெயில்கள் மற்றும் ஆடி லோகோ என அனைத்தும் கருமை நிறத்தை கொண்டுள்ளது. 18-இன்ச், 5 ஸ்போக் அலாய் வீல் விருப்பமான டூயல்-டோன் பெறுகின்றன.

பனோரமிக் சன்ரூஃப், முன் இருக்கைகளுக்கு பல வண்ண சுற்றுப்புற விளக்குகள், இரட்டை மண்டல காலநிலை கட்டுப்பாடு, வயர்லெஸ் சார்ஜர், பார்க்கிங் உதவி மற்றும் ரியர் வியூ கேமரா பெற்றுள்ளது.

Exit mobile version