Automobile Tamilan

இந்தியாவின் கிராஷ் டெஸ்ட் பாரத் என்சிஏபி அறிமுக தேதி வெளியானது

Bharat NCAP ratings

இந்தியாவின் விற்பனை செய்யப்படுகின்ற கார்களுக்கான கிராஷ் டெஸ்ட் பாதுகாப்பு தரத்தை உறுதி செய்யும் பாரத் என்.சி.ஏ.பி திட்டத்தை ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி திட்டத்தை துவங்கி வைக்கின்றார்.

3.5 டன் வரை உள்ள மோட்டார் வாகனங்களின் பாதுகாப்பு தரத்தை உயர்த்துவதன் மூலம் சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டில் இந்த திட்டம் மூலம் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றமடைய உள்ளது.

Bharat NCAP

மோட்டார் வாகனங்களின் விபத்து பாதுகாப்பு குறித்த ஒப்பீட்டு மதிப்பீட்டை கார் வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், கார் உற்பத்தியாளர்கள் தாமாக முன்வந்து ஆட்டோமோட்டிவ் இண்டஸ்ட்ரி ஸ்டாண்டர்ட் (Automotive Industry Standard – AIS) 197-யின் படி பரிசோதிக்கப்பட்ட தங்கள் கார்களை வழங்கலாம். சோதனைகளில் காரின் செயல்திறன் அடிப்படையில், வயது வந்தோருக்கான பயணிகள் ( Adult Occupants – AOP) மற்றும் குழந்தை பயணிகள் ( Child Occupant- COP) ஆகியோருக்கு நட்சத்திர மதிப்பீடுகள் வழங்கப்படும்.

கார் வாடிக்கையாளர்கள் வெவ்வேறு வாகனங்களின் பாதுகாப்பு தரத்தை பாரத் என்சிஏபி வழங்கும் நட்சத்திர மதிப்பீடு மூலம் ஒப்பீடு செய்து அதற்கேற்ப தங்கள் வாகனத்தை தேர்வு செய்யலாம்.

வாடிக்கையாளர் தேவைக்கு ஏற்ப கார் தயாரிக்க உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதன் மூலம் பாதுகாப்பான கார்களுக்கான தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உயர் பாதுகாப்பு தரங்களுடன், இந்திய கார்கள் உலக சந்தையில் சிறப்பாக போட்டியிட முடியும்.

பாரத் என்சிஏபி மூலம் இந்தியாவில் உள்ள கார் உற்பத்தியாளர்களின் ஏற்றுமதி திறனை அதிகரிக்கும். இந்த திட்டம் இந்தியாவில் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த கார் சந்தையை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க – பாரத் என்சிஏபி என்றால் என்ன ?

Exit mobile version