Site icon Automobile Tamilan

வெளியானது பிஎம்டபிள்யு X7

ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனம் புத்தம் புதிய X7 எஸ்யூவி மாடலின் படங்கள், தகவல்களை வெளியிட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பிரம்மாண்ட 7 சீட்டர் மாடலாக வர இருக்கும் இந்த பிரம்மாண்ட எஸ்யூவி மெர்சிடிஸ் பென்ஸ், வால்வோ, ஆடி கார் நிறுவனங்களுக்கு கடும் போட்டியை அளிக்கும். அடுத்த ஆண்டு இந்தியாவில் இந்த புதிய மாடல் எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு ஹெட்லைட் டிசைன்களுடன், LED DRLகளுடன் நவீன மேன்சிங் கிரில்களை கொண்டுள்ளது. இந்த எஸ்யூவிகளில் குரோம் சுற்றப்பட்டு உள்ளது. ரியர் பகுதியில் சிலிம் டைல்லைட்கள் மற்றும் ஸ்பிலிட் டைல்லைட்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரில் 21 இன்ச் அலாய் வீல்களுடன், முன்று பேனல் கொண்ட கிளாஸ் ரூப் பொருத்தப்பட்டுள்ளது.

புதிய X7 கார்களின் உள்பகுதியில் உட் கவர்களும், லெதர் மற்றும் மெட்டாலிக் டிரிம்களை கொண்டிருக்கும். மேலும் இதில் 12.3 இன்ச் டிஸ்பிளேகள் உள்ளன. ஒரு டிஜிட்டல் இன்ஸ்டுரூமென்ட் கிளச்சர்களுடன், மற்றொன்று இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம் கொண்டதாக இருக்கும்.

10 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம்களுடன் வயர்லெஸ் போன் சார்ஜிங், வை-பை ஹாட்ஸ்பாட் மற்றும் நான்கு மண்டல காலநிலை கண்ட்ரோல் வசதிகள் உள்ளன. இதுமட்டுமின்றி, இந்த காரில் மேலும் அதிக வசதிகள் இடம் பெற்றுள்ளன. ரியர் சீட் என்டேர்டைன்மென்ட் சிஸ்டம்களுடன் 10.2 இன்ச் டச்ஸ்கிரீன் டிஸ்பிளேகளுடன், வெப்பப்டுதும் சீட்கள், பவர் ரியர் விண்டோ பிளைன்ட்கள், ஹீட்/கூல் கப் ஹோல்டர்கள், ஹெட்அப் டிஸ்பிளே மற்றும் ஜென்ஸ்டர் கண்ட்ரோல் போன்றவை பொருத்தப்பட்டுள்ளது.

இந்த காரில் அசொர்மென்ட் டிரைவர் அசிஸ்டெண்ட்ஸ் சிஸ்டம் உள்ளது. வழக்கமாக இதில் ஆக்டிவ் பாதுகாப்பு மற்றும் ஆக்டிவ் டிரைவிங் அசிஸ்டெண்ட் சிஸ்டம்களுடன் பிளைன்ட் ஸ்பாட்களை அறிந்து கொள்ளும் வசதி, லேன் மாற்றினால் எச்சரிக்கும் வார்னிங், ரியர் மற்றும் பிரண்டல் விபத்து வார்னிங், பாதசாரிகள் குறித்த வார்னிங், கிராஸ் டிராபிக் அலர்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிறேகிங், ஸ்பீட் லிமிட் இன்பர்மேஷன் மற்றும் கேமரா சிஸ்டம் ஆகியவற்றையும் கொண்டிருக்கும்.

சர்வதேச மார்க்கெட்டில் இந்த கார்கள் டர்போசார்ஜ்டு 3.0 லிட்டர் 6-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின்களை கொண்டிருக்கும். இந்த இன்ஜின்கள் 335HP மற்றும் 446Nm டார்க்யூ கொண்டதாக இருக்கும். டூவின் டர்போ 4.4 லிட்டர் V8 இன்ஜின்கள் 456HP மற்றும் 648NM டார்க்யூ, மற்றும் 3.0 லிட்டர் 6-சிலிண்டர் டீலர் மோட்டார் 261HP ஆற்றல் மற்றும் 620Nm டார்க்யூவை கொண்டிருக்கும். இந்த இன்ஜின் 8ஸ்பீட் ஆட்டோமேடிக் டிரான்மிஷன் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார்கள் ஆல்-வீல் டிரைவ் கார்களாக இருக்கும்.

ஐரோப்பா மார்க்கெட்டை தொடர்ந்து புதிய X7 கார்களின் டெலிவரி வரும் மார்ச் 2019ம் ஆண்டில் அமெரிக்க மார்க்கெட்டில் டெலிவரி செய்யப்பட உள்ளது. இந்தியாவில் இந்த காரின் விலை 1 கோடியாக இருக்கும்

Exit mobile version