Automobile Tamilan

கூடுதல் ஆக்செரீஸ் உடன் சிட்ரோன் ஏர்கிராஸ் எக்ஸ்புளோரர் எடிசன் வெளியானது

2024 Citroen Aircross Xplorer Edition side view

இந்தியாவில் சிட்ரோன் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஏர்கிராஸ் எஸ்யூவி காரில் கூடுதலான ஆக்செரீஸ் சேர்க்கப்பட்ட சிறப்பு எக்ஸ்ப்ளோரர் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

பிரத்தியேகமாக கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ள இந்த எக்ஸ்ப்ளோரர் எடிசனில் மிக நேர்த்தியான நிறம் கொடுக்கப்பட்டு அதில் சூப்பரான ஆக்செரீஸ் சேர்க்கப்பட்டுள்ளதால் மிகவும் கவர்ச்சிகரமாக அமைந்திருக்கின்றது.

குறிப்பாக டேஷ் கேமரா பாதுகாப்பிற்காக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், ஃபுட்வேல் பகுதியில் லைட்டிங் செய்யப்பட்டு இன்டீரியரில் ஒளிரும் வகையிலான சில் பிளேட்ஸ் மற்றும் ஹூடின் மேற்பகுதியில் கார்னிஷ் கொடுக்கப்பட்டிருக்கின்றது. மேலும் வெளிப்புறத்தில் ஸ்டிக்கரிங் ஆனது காக்கி கலரில் வழங்கப்பட்டிருக்கின்றது. போன்ற வசதிகள் எக்ஸ்ப்ளோரர் மாடலுக்கு கவர்ச்சிகரமான தோற்றத்தை வெளிப்படுத்த முக்கிய காரணமாக உள்ளது.

மேலே உள்ள வசதிகள் கொண்ட ஸ்டாண்டர்ட் எக்ஸ்ப்ளோரர் எடிசன் விலை 24,000 கூடுதலாகவும், வழங்கப்படுகின்ற நிலையில் கூடுதலாக பின்புற இருக்கைகளுக்கு பொழுதுபோக்கு சார்ந்த இன்ஃபோடெயின்மென்ட் வசதி மற்றும் டூயல் போர்ட் அடாப்டர் வழங்கப்படுகின்ற வசதிகளின் விலை 51,700 ஆகும்.

Exit mobile version