Automobile Tamilan

சிட்ரோன் பாசால்ட் எஸ்யூவி விலை பட்டியல் வெளியானது

citroen basalt

இந்தியாவில் சிட்ரோன் வெளியிட்டுள்ள பாசால்ட் கூபே எஸ்யூவி மாடலின் ஆரம்ப விலை ரூ.7.99 லட்சம் முதல் துவங்கி ரூ.13.83 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கர்வ் கூபே மாடலை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள பாசால்டில் 1.2 லிட்டர் NA பெட்ரோல் எஞ்சின் மற்றொன்று 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் என இரண்டிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.

1.2 லிட்டர் Puertech 82 NA எஞ்சின் அதிகபட்சமாக 82 PS பவர் மற்றும் 110 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் உள்ளது.

1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் Puretech 110 எஞ்சின் பவர் 110 PS மற்றும் 190 Nm டார்க் (205Nm டார்க்கினை ஆட்டோமேட்டிக்) வெளிப்படுத்துகின்றது. இதில் ஆறு வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

Citroen Basalt Price list

Plus, Plus Turbo MT, Max Turbo MT, மற்றும் Plus Turbo AT, Max Turbo AT என மொத்தமாகாக 7 வேரியண்டுகளில்  கிடைக்க உள்ளது. தற்பொழுது 1.2L NA You MT விலை ரூ.7.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.

Exit mobile version