டட்சன் கோ & கோ பிளஸ் ரீமிக்ஸ் எடிசன் விற்பனைக்கு வந்தது

இந்தியாவின் நிசான் நிறுவனத்தின் தலைமையின் கீழ் செயல்படும், டட்சன் இந்நியா நிறுவனம் டட்சன் கோ மற்றும் டட்சன் கோ பிளஸ் கார்களின் அடிப்படையில் ரீமிக்ஸ் லிமிடெட் எடிசன் மாடலை தோற்ற மாறுதல் , கூடுதல் வசதிகளை கொண்டதாக இந்நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

டட்சன் கோ & கோ பிளஸ் ரீமிக்ஸ் எடிசன்

இரு கார்களின் தோற்றம் மற்றும் இன்டிரியர் அமைப்பில் மட்டும் கூடுதலான வசதிகள் மற்றும் ஸ்டைலிங் சேர்க்கப்பட்டு எஞ்சின் ஆற்றல் மற்றும் டார்க் ஆகியவற்றில் எவ்விதமான மாறுதல்களும் செய்யப்படவில்லை.

கோ மற்றும் கோ பிளஸ் மாடல்களில் 68 ஹெச்பி பவர், 104 என்எம் டார்க் வழங்க வல்ல 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பிடித்துள்ளது.

கோ மற்றும் கோ பிளஸ் கார்களில் முன்புற பானெட், மேற்கூறை ஆகியவற்றில் புதிதாக பாடி கிராபிக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. கோ காரில் கருப்பு நிறத்துடன் ஆரஞ்சு நிறம் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. கோ பிளஸ் காரில் இரு நிற கலவை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது வெள்ளை நிறத்தில் ஆரஞ்சு நிறத்தை இணைத்து கூடுதலாக கருப்பு நிற ஸ்டிக்கரிங் சேர்க்கப்பட்டுள்ளது. இரு மாடல்களும் சில்வர் மற்றும் வெள்ளை நிறத்தை பெற்றுள்ளது.

இரு மாடல்களின் இன்டிரியர் அமைப்பில் கருப்பு நிறத்தை பெற்று , கூடுதலாக 9 விதமான புதிய வசதிகளாக ரிமோட் கீலெஸ் என்ட்ரி, இருக்கை கவர், ஹேன்ட்ஸ் ஃபீரி புளூடூத் ஆடியோ, முன்பக்கத்தில் புதிய கிரில், கருப்பு நிற வீல் கவர், பின்புற ஸ்பாய்லர், க்ரோம் பூச்சை பெற்ற எக்ஸ்ஹாஸ்ட் மற்றும் பம்பர் கார்னிஷ் ஆகியவற்றை பெற்று விளங்குகின்றது.

டட்சன் கோ & கோ பிளஸ் ரீமிக்ஸ் விலை பட்டியல்

டட்சன் கோ ரீமிக்ஸ் எடிசன் விலை பட்டியல் – ரூ.4.21 லட்சம்

டட்சன் கோ+ ரீமிக்ஸ் எடிசன் விலை பட்டியல் – ரூ.4.99 லட்சம்