கூடுதல் பாதுகாப்பு வசதியுடன் டட்சன் கோ, கோ+ கார்கள் அறிமுகம்

Datsun Go

குறைந்த விலை கொண்ட டட்சன் கோ, டட்சன் கோ+ என இரு கார்களிலும் கூடுதலான பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கியதாக விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

கூடுதலான பாதுகாப்பு வசதி மட்டுமல்லாமல், T மற்றும் T (O) வேரியன்டுகளில் 7.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் புதிதாக கோ காரில் மட்டும் விவிட் ப்ளூ நிறம் சேர்க்கப்பட்டுள்ளது.

டட்சன் கோ, கோ பிளஸ் கார்

கோ ஹேட்ச்பேக் மற்றும் கோ பிளஸ் எம்பிவி என இரு கார்களிலும் இணைக்கப்பட்டுள்ள வெய்கிள் டைனமிக் கண்ட்ரோல் சிஸ்டம் (Vehicle Dynamic Control – VDC) ஆனது, வாகனத்தின் ஸ்டீயரிங் பொசிஷன், வீல் ஸ்பீடு மற்றும் வளைவுகளில் வாகனத்தின் நிலைப்புத்தனைமை கண்காணிக்கும் சென்சார் விபரங்ளை எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் சிஸ்டம் பெற்று சிறப்பான வாகன நிலைப்பாட்டை மேம்படுத்த உதவுகின்றது. இதுதவிர கூடுதலாக ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உடன் இபிடி மற்றும் பிரேக்கிங் அசிஸ்ட் கொண்டதாக விளங்குகின்றது.

T மற்றும் T (O) வேரியன்டுகளில் 7.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே அம்சத்துடன் வந்துள்ளது. இரண்டு கார்களிலும் 68 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு 104 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

டட்சன் கோ காரின் விலை ரூ.3.32 லட்சம் முதல் ரூ. 5.02 லட்சம் வரை அமைந்திருக்கின்றது. கோ பிளஸ் காரில் ரூ. 3.86 லட்சம் முதல் ரூ. 5.74 லட்சம் வரையில் அமைந்திருக்கின்றது.

 

 

 

Exit mobile version