Automobile Tamilan

மீண்டும் ஃபோர்டு இந்திய வருகை உறுதியானது..!

ford everest wildtrack

சமீபத்தில் அமெரிக்கா பயணம் மேற்கோண்டிருந்த தமிழ்நாட்டின் முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களின் சந்திப்புக்கு பிறகு ஃபோர்டு இந்தியா தனது சென்னை ஆலையில் உற்பத்தியை துவங்க உள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

முதற்கட்டமாக ஃபோர்டு இந்தியாவில் தயாரிக்க உள்ள மாடல்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும், அடுத்த 3 ஆண்டுகளில் சுமார் 3,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஃபோர்டு நிறுவனத்தின் லட்சியமான  Ford+ growth திட்டத்தின் ஒரு பகுதியாக, உலகளாவிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான உற்பத்தியில் கவனம் செலுத்தும் வசதியை மீண்டும் உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.

ஃபோர்டு இன்டர்நேஷனல் மார்க்கெட்ஸ் குழுமத்தின் தலைவர் Kay Hart கூறுகையில், “சென்னை ஆலைக்கான பல்வேறு விருப்பங்களை நாங்கள் ஆராய்ந்ததில், தமிழ்நாடு அரசின் தற்போதைய ஆதரவிற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். “இந்த நடவடிக்கையானது, புதிய உலகச் சந்தைகளுக்குச் சேவை செய்வதற்காக, தமிழ்நாட்டில் கிடைக்கும் உற்பத்தி நிபுணத்துவத்தைப் பயன்படுத்த உத்தேசித்துள்ளதால், இந்தியாவிற்கான நமது தற்போதைய உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.”

உற்பத்தி வகை மற்றும் பிற விவரங்கள் பற்றிய கூடுதல் தகவல்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி சந்தைக்கான மாடல்கள் குறித்தான விபரங்களும் இந்திய சந்தையில் எப்பொழுது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் மீண்டும் ஃபோர்டு கார்கள் என்று எதிர்பார்ப்பும் தற்பொழுதும் அதிகரித்துள்ளதால் இது குறித்தான முழுமையான விபரங்கள் வரும் நாட்களில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

Exit mobile version