Site icon Automobile Tamilan

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி அறிமுக தேதி விபரம்

வருகின்ற நவம்பர் 9ந் தேதி இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதை ஃபோர்டு அதிகார்வப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

இந்தியாவின் பிரசத்தி பெற்ற காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலாக விளங்கும் ஈக்கோஸ்போரட் எஸ்யூவி மேம்படுத்தப்பட்ட மாடல் தோற்ற அமைப்பு மற்றும் இன்டிரியரில் புதிய அம்சங்களை பெற்றிருப்பதுடன் புதிதாக டிராகன் வரிசை 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை பெற்றுள்ளது.

புதிய 1.5 லிட்டர் Ti-VCT (Twin Independent Variable Camshaft Timing) 3 சிலிண்டர் கொண்ட பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 123 ஹெச்பி ஆற்றல் மற்றும் 150 என்எம் டார்க்கினை வழங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றதாக வரவுள்ளது

மற்றொரு பெட்ரோல் மாடலாக சக்திவாய்ந்த 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என மொத்தம் மூன்று விதமான எஞ்சின் தேர்வுகளில் கிடைக்க உள்ளது.

முன்புறத்தில் மேம்படுத்தப்பட்ட அகலமான கிரில் ஈக்கோஸ்போர்ட் மாடலுக்கு புதுவிதமான கம்பீரத்தை வழங்குவதுடன் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர ரன்னிங் விளக்குகளை பெற்றிருப்பதுடன், இன்டிரியரில் ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி மாடலில் மேம்படுத்தப்பட்ட ஃபோர்ட் SYNC 3 இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே அம்சங்களை பெற்றதாக வரவுள்ளது.

வருகின்ற நவம்பர் 9ந் தேதி 2017 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Exit mobile version