இந்தியாவில் ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் கார் அறிமுகம்

இன்றைக்கு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஃபோர்டு இந்தியா நிறுவனம், சர்வதேச அளவில் க்ராஸ் ஹேட்ச்பேக் மாடலாக ஃபோர்டு  ஃப்ரீஸ்டைல் காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த காரில் புதிய 1.2 லிட்டர் டிராகன் பெட்ரோல் எஞ்சினுடன் வரவுள்ளது.

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் கார்

மிக நேர்த்தியான வடிவமைப்பை பெற்ற காராக காட்சியளிக்கின்ற ஃப்ரீஸ்டைல் ஃபிகோ ஹேட்ச்பேக் காரினை பின்புலமாக கொண்டு க்ராஸ்ஓவர் ரக வடிவமைப்பின் கலப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஃபிகோ காரின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ள மிக நேர்த்தியான ஃபீரிஸ்டைல் கார் மிக நேர்த்தியான தேன்கூடு கிரிலுடன், அகலமான பானெட், ஸ்கிட் பிளேட் மற்றும் கருப்பு நிற பூச்சினை கொண்ட ஹெட்லைட் ஆகியவற்றை பெற்றுள்ளது. 6.5 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஃபோர்டு சிங்க் 3 பெற்றிருப்பதுடன் 6 காற்றுப்பைகள் கொண்டதாக உள்ளது.

ஃப்ரீஸ்டைல் காரில் 96 ஹெச்பி ஆற்றல், 120 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் டிராகன் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும், இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். 100 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பெற்றிருக்கும்.

வருகின்ற ஏப்ரல் மாத மத்தியில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஃபோர்டு ஃபீரிஸ்டைல் கார் ஆரம்ப விலை ரூ.6.50 லட்சத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version