Automobile Tamilan

புதிய கருப்பு நிறத்தில் ஹோண்டா அமேஸ் கார் அறிமுகமானது

amaze Crystal Black Pearl’ colour

விற்பனையில் உள்ள மூன்றாவது தலைமுறை அமேஸ் காரில் கூடுதலாக கிரிஸ்டல் பிளாக் பேர்ல்  என்ற நிறத்தை  பெற்று விலையில் எந்த மாற்றமும் அறிவிக்கப்படவில்லை. தற்பொழுது இந்த காரில் லூனார் சில்வர் மெட்டாலிக், மீட்டியோராய்டு கிரே மெட்டாலிக், பிளாட்டினம் வெள்ளை பேர்ல், கோல்டன் பிரவுன் மெட்டாலிக், ரேடியன்ட் ரெட் மெட்டாலிக், ப்ளூ பேர்ல் என மொத்தமாக தற்பொழுது 8 நிறங்களை கொண்டுள்ளது.

மற்றபடி, அமேஸ் காரில் தொடர்ந்து  1.2 லிட்டர் i-VTEC 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் மட்டும் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக பவர் 90 hp மற்றும் 110Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த காரில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் என இரண்டு விதமாக கிடைக்கின்றது.

இந்திய சந்தையில் கிடைக்கின்ற செடான் ரக மாடல்களில் குறைந்த விலையில் ADAS பெறுகின்ற காராக அமேஸ் விளங்குகின்றது.

ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட்டின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைத் துணைத் தலைவர் திரு. குணால் பெஹ்ல், “ஹோண்டா அமேஸ், ஸ்டைல், நம்பகத்தன்மை மற்றும் மதிப்பைத் தேடும் இந்தியாவின் இளம் மற்றும் துடிப்பான கார் வாங்குபவர்களுடன் தொடர்ந்து எதிரொலிக்கிறது. கிரிஸ்டல் பிளாக் பேர்ல் நிறத்தின் அறிமுகத்துடன், இன்றைய இளைஞர்களின் வளர்ந்து வரும் ரசனைகளைப் பிரதிபலிக்கும் ஒரு தைரியமான மற்றும் நவீன தேர்வைச் சேர்க்கிறோம்

சமீபத்திய ஜிஎஸ்டி 2.0 வரி குறைப்பால் ஹோண்டா கார்ஸ் விலை ரூ.95,500 வரை குறைக்கப்பட உள்ளதை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version