Automobile Tamilan

ஜூன் 1 முதல் ஹோண்டா கார்களின் விலை உயருகின்றது

honda city facelift

வரும் ஜூன் 2023 முதல் சிட்டி மற்றும் அமேஸ் என இரு கார்களின் விலையை 1 சதவீதம் வரை உயர்த்துவதாக ஹோண்டா கார்ஸ் இந்தியா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் எதிர்கொள்ளும் அதிகரித்து வரும் செலவுகளை ஈடுகட்டும் வகையில் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

Honda Cars

சிட்டி e:HEV  காரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. வரும் ஜூன் 6 ஆம் தேதி புதிய ஹோண்டா எலிவேட் எஸ்யூவி அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. ஐந்தாம் தலைமுறை சிட்டி பிளாட்ஃபாரத்தை பகிர்ந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் அதிக போட்டி நிறைந்த காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் வரவுள்ளது.

எலிவேட் காருக்கு, போட்டியாக ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மற்றும் கியா செல்டோஸ் போன்ற இந்திய சந்தையில் பிரபலமான நடுத்தர அளவிலான எஸ்யூவிகளை எதிர்கொள்ளும்.

Exit mobile version