Automobile Tamilan

ஹோண்டா எலிவேட் ஃபீல்ட் எக்ஸ்புளோரர் கான்செப்ட் அறிமுகம்

honda elevate Field Explorer suv concept

இந்திய சந்தையில் சிறப்பான வரவேற்பினை பெற்ற ஹோண்டா எலிவேட் எஸ்யூவி காரில் ஃபீல்ட் எக்ஸ்புளோரர் கான்செப்ட் என்ற பெயரில் டோக்கியா ஆட்டோ சலூன் 2024 அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு ஜப்பானில் WR-V என்ற பெயரில் விற்பனைக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்ற எலிவேட் காரின் விலை ரூ.58,000 வரை சமீபத்தில் உயர்த்தப்பட்டது.

Honda Elevate Field Explorer

தோற்ற அமைப்பில் முரட்டுத்தனமான முகப்பினை பெறும் வகையில் புதிய கருமை நிற கிரில் சேர்க்கப்பட்டு கூடுதலாக விளக்குகள் மேற்பகுதியில் கொடுக்கப்பட்டு கூடுதலாக ஹெட்லைட் மற்றும் பனி விளக்கு அறைகளில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. H லோகோவிற்கு பதிலாக ஹோண்டா என எழுதப்பட்டுள்ளது.

பக்கவாட்டில் புதுப்பிக்கப்பட்ட கருப்பு நிற அலாய் வீல் , உயரமான வீல் ஆர்ச், ஸ்கிட் பிளேட் கொண்டு மேற்கூறையில் பொருட்களை சுமக்கும் வகையில் ரூஃப் ரெயில்கள் மற்றும் பின்புறத்தில் ஸ்கிட் பிளேட் மற்றும் கருமை நிறத்துக்கு பல்வேறு இடங்களில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

மற்றபடி, இன்டிரியர் தொடர்பான படங்களை வெளியிடவில்லை, ஆனால் தொடர்ந்து  ஹோண்டா எலிவேட் எஸ்யூவி மாடலில் 1.5-லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு 4300 rpm சுழற்சியில் 121hp பவர், 145Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் CVT ஆட்டோ கியர்பாக்ஸ் என இரண்டு விதமாக கிடைக்கின்றது.

காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஹோண்டா எலிவேட் ஃபீல்டு எக்ஸ்புளோரர் கான்செப்ட் இந்திய சந்தையில் ஸ்பெஷல் எடிசன் மாடலாக விற்பனைக்கு வெளியிடப்பட வாயுப்புள்ளது.

Exit mobile version