இந்தியாவில் ஹோண்டா HR-V எஸ்யூவி விற்பனைக்கு வருகின்றது

இந்தியாவில் ஹோண்டா விற்பனைக்கு வெளியிட உள்ள புதிய ஹோண்டா HR-V எஸ்யூவி காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷனுடன் மிகவும் ஸ்டலிஷான மாடலாக விளங்க உள்ளது. 2019 தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக இந்த கார் விற்பனைக்கு வரக்கூடும்.

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம், இந்தியாவில் 6 புதிய மாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில் தற்போது வரை சிவிக், சிஆர்வி மற்றும் அமேஸ் கார்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஹோண்டா HR-V எஸ்யூவி

ஹோண்டாவின் பிரசத்தி பெற்ற BR-V மற்றும் ஹோண்டா CR-V என இரு எஸ்யூவி ரக மாடல்களுக்கு இடையில் நிலை நிறுத்தப்பட்டுள்ள ஹெச்ஆர்-வி காரில் 1.8 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு 141 பிஎஸ் பவரையும், 174 என்எம் டார்க்கையும் வழங்கும். இதில் சிவிடி கியர்பாக்ஸ் வழங்கப்பட்டிருக்கும். 1.6 லிட்டர் டீசல் என்ஜின் 120 பிஎல் பவரையும், 300 என்எம் டார்க் வழங்கும். இதில் மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டிருக்கும்.

இந்த காரில் தாராளமாக இடவசதியை வழங்கும் நோக்கில் 2,610mm வீல் பேஸ் வழங்கப்பட்டு காரின் நீளம் 4,295mm, அகலம் 1,777mm கொண்டதாகவும் உயரம் 1,605 ஆக விளங்கும். கிரவுண்ட் கிளியரன்ஸ் 180mm ஆக உள்ளது.

இந்தியாவில் பாகங்களை தருவித்து ஒருங்கிணைத்து விற்பனை செய்ய ஹோண்டா இந்தியா திட்டமிட்டு வருகின்றது. இங்கே கிடைக்கின்ற கிரெட்டா, நிசான் கிக்ஸ் மற்றும் கேப்டூர் போன்ற மாடல்களுக்கு சவாலாக இந்த கார் விளங்கும் என கருதப்படுகின்றது.

Exit mobile version