Automobile Tamilan

473 கிமீ ரேஞ்ச்.., க்ரெட்டா எலெக்ட்ரிக் காரை வெளியிட்ட ஹூண்டாய்

ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக்

ஜனவரி 17 ஆம் தேதி விலை அறிவிக்கப்பட உள்ள ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் 42kWh மற்றும் 51.4kWh என இரண்டு பேட்டரி ஆப்ஷனை பெற்று முறையே 390 கிமீ முதல் 473 கிமீ வரையிலான ரேஞ்ச் வெளிப்படுத்தும் என ARAI மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Executive, Smart, Premium மற்றும் Excellence என நான்கு விதமான வேரியண்ட் பெற்று 8 விதமான ஒற்றை நிறங்கள், இரண்டு டூயல் டோன் நிறங்களுடன் இதில் மூன்று மேட் நிறங்களை பெற்று புதிதாக சேர்க்கப்பட்டுள்ள ஓசன் ப்ளூ என்ற நிறத்தில் மேற்கூறை கருப்பு நிறத்தை கொண்டு டாப் வேரியண்டில் அகலமான பனரோமிக் சன்ரூஃப் பெற்றிருக்கும்.

Hyundai Creta Electric

க்ரெட்டா எலெக்ட்ரிக் 51.4kWh பேட்டரி பெறுகின்ற லாங் ரேஞ்ச் மாடல் சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 473 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் என ARAI சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில் 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு வெறும் 7.9 விநாடிகள் மட்டும் எடுத்துக் கொள்ளும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த குறைந்த ரேஞ்ச் வெளிப்படுத்துகின்ற 42kWh பேட்டரி பெறுகின்ற மாடல் சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 390 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் என ARAI சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

உண்மையான ரேஞ்ச் 42kWh மற்றும் 51.4kWh gன இரண்டின் முறையே 280 முதல் 350 கிமீ வரை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சார்ஜிங் தொடர்பாக ஹூண்டாய் வெளியிட்ட அறிக்கையின் மூலம் 10-80 % சார்ஜிங் DC விரைவு சார்ஜரை பயன்படுத்தினால் 58 நிமிடத்தில் எட்டும் எனவும், வீட்டிற்கான  AC முறையிலான 11kW கனெக்டேட் ஸ்மார்ட் வால் சார்ஜரின் மூலம் 4 மணிநேரத்தில் 10% -100% வரை சார்ஜ் செய்யலாம் என குறிப்பிடுகின்றது.

க்ரெட்டா எலெக்ட்ரிக் டிசைன்

அடிப்படையில் க்ரெட்டாவின் ICE மாடலை தழுவி வடிவமைக்கப்பட்டாலும், முன்புறத்தில் உள்ள பம்பர் அமைப்பில் மாறுதல் சிறிய அளவிலான டிசைன் வேறுபாடினை வழங்கி வித்தியாசப்படுத்துகின்றது. பக்கவாட்டில் வழக்கமான க்ரெட்டா போல அமைந்தாலும் 17 அங்குல ஏரோ டைனமிக் டிசைன் அலாய் வீல் பெற்று பின்புறத்தில் எல்இடி டெயில் லைட் மற்றும் பம்பர் பகுதிகளில் சிறிய மாறுதல்கள் தரப்பட்டுள்ளது.

இன்டீரியர் தொடர்பாக க்ரெட்டாவின் மிக அகலமான இரட்டை 10.25 அங்குல டிஸ்பிளே பெற்று டேஸ்போர்டின் நிறங்கள் மற்றும் இருக்கையின் நிறங்கள் உள்ளிட்டவை மாறுதல் பெற்றிருக்கலாம்.

ஹூண்டாய் I-pedal என்ற ஒற்றை பெடல் நுட்பத்துடன் வாகனத்தில் இருந்து பவரை மற்ற இடங்களுக்கு பயன்படுத்தும் (V2L) தொழில்நுட்பம், 360-டிகிரி கேமரா, இரண்டாம் நிலை ADAS பாதுகாப்பு தொகுப்பு மற்றும் ஹூண்டாயின் டிஜிட்டல் கீ,  Eco, Normal மற்றும் Sport போன்ற டிரைவிங் மோடுகளை பெற்றிருக்கும்.

இந்த மாடலுக்கு சவாலாக மாருதி சுசூகி இவிட்டாரா, டாடா கர்வ் இவி, மஹிந்திரா பிஇ 6 உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ள உள்ளது.

Hyundai Creta electric image gallery

creta electric colours

Exit mobile version