Automobile Tamilan

ஹூண்டாய் க்ரெட்டா EV முன்பதிவு துவங்கியது.!

hyundai creta ev rear view

ஜனவரி 17 ஆம் தேதி வெளியாக உள்ள க்ரெட்டா எலெக்ட்ரிக் மாடலுக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில் முன்பதிவு கட்டணமாக ரூ.25,000 வசூலிக்கப்படுகின்றது. 4 விதமான வேரியண்டில் 10 விதமான நிறங்கள் பெற்று 18 விதமான வகைகள் இடம்பெற்றுள்ளது.

ஏற்கனவே க்ரெட்டா இவி பேட்டரி, ரேஞ்ச் உள்ளிட்ட அனைத்து முக்கிய தகவல்களையும் ஹூண்டாய் வெளியிட்டுள்ளதால் புக்கிங் துவங்கப்பட்டுள்ள நிலையில் ஜனவரி மாத மத்தியில் விநியோகம் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டாப் வேரியண்டில் உள்ள  51.4kWh பேட்டரி பெறுகின்ற லாங் ரேஞ்ச் மாடல் சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 473 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும், குறைந்த விலை 42kWh பேட்டரி பெறுகின்ற மாடல் சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 390 கிமீ ரேஞ்ச் வழங்கும் என சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.

லெவல் 2 அடாஸ், 360 டிகிரி கேமரா, 6 ஏர்பேக்குகள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் இன்டீரியரில் டூயல் செட்டப் பெற்ற 10.25 அங்குல கிளஸ்ட்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஹூண்டாய் ஐ-பெடல் நுட்பம் உள்ளிட்ட வசதிகளை கொண்டிருக்கின்றது.

Executive, Smart, Smart (O), Premium, Smart (O), மற்றும் Excellence ஆகிய வேரியண்டுகளில் குறைந்த விலை  Executive, Smart என இரண்டிலும் வெள்ளை மற்றும் கருப்பு என இரு நிறங்களை மட்டும் பெறுகின்றது. மற்ற வகைகளில் அனைத்து நிறங்களும் கிடைக்க உள்ளது.

5 மெட்டாலிக் நிறங்கள் : அபிஸ் பிளாக், அட்லஸ் ஒயிட், சிவப்பு, கருப்பு, ஓஷன் ப்ளூ.
3 மேட் நிறங்கள்: ஓஷன் ப்ளூ மேட், டைட்டன் கிரே மேட், எமரால்டு மேட்.
2 டூயல் டோன்: ஓஷன் ப்ளூ நிறத்துடன் அபிஸ் பிளாக் ரூஃப் மற்றும் அட்லஸ் ஒயிட் உடன் அபிஸ் பிளாக் ரூஃப் கொண்டுள்ளது.

தற்பொழுது முன்பதிவு டீலர்கள் மற்றும் இந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் நடைபெற்று வருகின்றது.

Hyundai Creta electric colours

Exit mobile version