Automobile Tamilan

குறைந்த விலையில் ஹூண்டாய் வெனியூ சன்ரூஃப் வேரியண்ட் அறிமுகம்

new hyundai venue turbo launched

இந்திய சந்தையில் தற்பொழுது சன்ரூஃப் பெற்றிருக்கின்ற மாடல்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் குறைந்த விலை வேரியன்டை ஹூண்டாய் நிறுவனம் ₹ 10 லட்சத்தில் வெனியூ S(O)+ சன்ரூஃப் கொண்ட மாடலை வெளியிட்டு இருக்கின்றது.

மற்றபடி ஏற்கனவே சந்தையில் கிடைக்கின்ற S(O) வேரியண்ட் அடிப்படையிலான வசதிகளுடன் 1.2 லிட்டர் பெட்ரோல் கப்பா என்ஜினில் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் கொண்ட மாடலாக கிடைக்கின்றது.

VENUE S(O) + வேரியண்டில் ஸ்மார்ட் எலக்ட்ரிக் சன்ரூஃப், எல்இடி ரன்னிங் விளக்கு, எல்இடி புரொஜெக்டர் ஹெட்லேம்ப், TFT மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே (MID) கொண்ட டிஜிட்டல் கிளஸ்டர், 8” அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.

S(O)+ வேரியண்டின் பாதுகாப்பில், 6 ஏர்பேக்குகள், TPMS ஹைலைன், தானியங்கி ஹெட்லேம்ப்கள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் கன்ட்ரோல் (HAC), பின்புற கேமரா என பல பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.

ஏற்கனவே, சந்தையில் கிடைக்கின்ற மஹிந்திரா XUV 3XO மாடல் மிக விலை குறைவான சன்ரூஃப் உள்ள மாடலாக ரூ.8.99 லட்சம் முதல் துவங்குகின்றது.

Exit mobile version