60 நாட்களில் 50,000 முன்பதிவுகளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி

hyundai venue

விற்பனைக்கு வெளிவந்த நாள் முதல் தற்போது வரை 50,000க்கு மேற்பட்ட முன்புதிவுகளை பெற்றுள்ள ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி மாடல் இதுவரை 18,000க்கு மேற்பட்ட கார்கள் இந்தியாவில் டெலிவரி கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 21 ஆம் தேதி விற்பனைக்கு வெளியான வென்யூ எஸ்யூவி அறிமுக விலை ரூ. 6 லட்சத்து 50 ஆயிரம் என தொடங்கி அதிகபட்சமாக 11 லட்சத்து 10 ஆயிரமாக விற்பனை செய்யபடுகின்றது. மேலும் புக்கிங் செய்துள்ள பெரும்பாலானோரின் விருப்பமான தேர்வாக ப்ளூலிங்க் டெக்னாலாஜி பெற்ற டாப் வேரியண்ட் மாடலாகும். மேலும் 35 சதவீத முன்பதிவு டிசிடி டர்போ மாடலாகவும் உள்ளது.

10 விதமான நிறங்கள், 33 வகையான ப்ளூலிங்க் டெக்னாலாஜி வசதிகள், இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என்ஜின் ஆப்ஷன் போட்டியாளர்களை விட குறைவான விலை, மூன்று வருட வாரண்டி அல்லது வரம்பற்ற கிமீ மற்றும் மூன்று வருட ரோடு அசிஸ்டென்ஸ் போன்றவற்றை பெற்றுள்ளது.

120 HP குதிரைத்திறன் மற்றும் 172 Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் கப்பா T-GDI என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த என்ஜினில் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ மற்றும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை இந்த என்ஜின் மட்டும் பெற்றுள்ளது.

வென்யூ 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மைலேஜ் லிட்டருக்கு 18.27 கிமீ (மேனுவல்) மற்றும் லிட்டருக்கு 18.15 கிமீ (ஆட்டோமேட்டிக்) ஆகும்.

இரண்டாவதாக உள்ள பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் உள்ள ஹூண்டாய் ஐ20 காரில் இடம்பெற்றுள்ள அதே என்ஜினை கொண்டுள்ள வெனியூவில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு 83 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 115 என்எம் முறுக்குவிசை வெளிப்படுத்துகிறது. வென்யூ 1.2 லிட்டர் பெட்ரோல் மைலேஜ் லிட்டருக்கு 17.52 கிமீ (மேனுவல்)

வென்யூ டீசல் என்ஜின் தேர்வினை மட்டும் வழங்குகின்றது. 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் மாடல் 90 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 220 என்எம் முறுக்குவிசை பெற்றதாக விளங்குகின்றது. இந்த என்ஜினில் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் வழங்கப்படவில்லை. வென்யூ 1.4 லிட்டர் டீசல் என்ஜின் மைலேஜ் லிட்டருக்கு 23.70 கிமீ (மேனுவல்).

பாதுகாப்பு அம்சங்களில் குறிப்பாக ஏபிஎஸ், 6 ஏர்பேக்குகள், இஎஸ்பி, ஐஎஸ்ஓ ஃபிக்ஸ் சைல்டு இருக்கைகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹீல் ஹோல்ட் அசிஸ்ட், ரியர் கேமரா உடன் ரியர் பார்க்கிங் சென்சார்,  போன்றவற்றை பெற்றதாக அமைந்துள்ளது.

இந்த காருக்கு போட்டியாக மஹிந்திரா எக்ஸ்யூவி300, டாடா நெக்ஸான் எஸ்யூவி, பிரபலமான ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் மாருதியின் விட்டாரா பிரெஸ்ஸா ஆகியவை உள்ளது.

ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி விலை பட்டியல்

பெட்ரோல்
Hyundai Venue 1.2 Kappa E MT- ரூ. 6.50 லட்சம்
Hyundai Venue 1.2 Kappa S MT – ரூ. 7.20 லட்சம்
Hyundai Venue 1.0 GDI S MT- ரூ. 8.21 லட்சம்
Hyundai Venue 1.0 GDI SX MT- ரூ. 9.54 லட்சம்
Hyundai Venue 1.0 GDI SX (O) MT- ரூ. 10.60 லட்சம்
Hyundai Venue 1.0 GDI SX DCT- ரூ. 9.35 லட்சம்
Hyundai Venue 1.0 GDI SX+ DCT- ரூ. 11.10 லட்சம்

டீசல்
Hyundai Venue 1.4 CRDI E MT- ரூ. 7.75 லட்சம்
Hyundai Venue 1.4 CRDI S MT- ரூ. 8.45 லட்சம்
Hyundai Venue 1.4 CRDI SX MT- ரூ. 9.78 லட்சம்
Hyundai Venue 1.4 CRDI SX (O) MT- ரூ. 10.80 லட்சம்

(எக்ஸ்ஷோரூம் விலை டெல்லி)

Hyundai venue SUV officially revealed
Exit mobile version