ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி டீசர் வீடியோவில் முன்புறம் வெளியானது

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி

வரும் ஏப்ரல் 17-ம் தேதி , ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய வெனியூ (Hyundai Venue) எஸ்யூவி கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தியா உட்பட சர்வதேச நாடுகளில் வெனியூ மாடல் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. முன்பாக இந்த மாடல் ஹூண்டாய் QXi என அறியப்பட்டு வந்தது.

சமீபத்தில் ஹூண்டாய் நிறுவனம், பெயரை வெளியிட்டதை தொடர்ந்து முதல் அதிகார்வப்பூர்வ டீசர் வீடியோவின மூலம் முகப்பு தோற்ற அமைப்பின் தன்மை வெளியாகியுள்ளது.

வெனியூ எஸ்யூவி டீசர் வீடியோ

ஹூண்டாய் நிறுவனத்தின், சான்டா ஃபீ, கோனா மற்றும் கிரெட்டா போன்ற மாடல்களின் தோற்ற உந்துதலில் வடிவமைக்கப்பட்ட எஸ்யூவி மாடலாக வெனியூ விளங்குகின்றது. முகப்பில் மிக நேர்த்தியான கிரிலுடன், எல்இடி விளக்குகளை கொண்டதாக உள்ள ஹெட்லைட் பெற்றதாக உள்ளது.

பெரும்பாலான பகுதிகளில் க்ரோம் பூச்சு உட்பட மேற்கூறையில் சன் ரூஃப் என பல்வேறு நவீன அம்சங்களை கொண்டதாகவும், புதுவிதமான வடிவமைப்பினை பெற்ற அலாய் வீல் கொண்டிருக்கும்.

இன்டிரியரில் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட அம்சத்தை பெற்ற தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் கிளஸ்ட்டர், மேலும் டெலிமேட்டிக்ஸ் ஆப் உள்ளிட்ட வசதிளுடன், மடிக்கும் எலக்ட்ரிக் முறையிலான மிரர் அகியவற்றை பெற்றுள்ளது. பாதுகாப்பு சார்ந்த இரு காறுப்பைகள், ஏபிஎஸ் பிரேக் உட்பட ஐஎஸ்ஓ ஃபிக்ஸ் இருக்கைகள் கொண்டிருக்கும்.

100 HP மற்றும் 172 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம். இந்த என்ஜினில் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் மற்றும் அடுத்த பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் 1.4 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினை பெற்றிருக்கும்.

Exit mobile version