Automobile Tamilan

1850 ஸ்கார்பியோ கார்களை ஆர்டர் செய்த இந்திய ராணுவம்

இந்தியாவின் முன்னணி யூட்டிலிட்டி வாகன தயாரிப்பாளரான மஹிந்திரா மற்றும் மஹிந்திரா நிறுவனம், இந்திய ராணுவத்திடம் இருந்து 1,850 மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் எஸ்யூவி ஆர்டரைப் பெற்றுள்ளது. சமீபத்தில் தங்களது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்நிறுவனம் 1,470 எஸ்யூவிகளை ஆர்டரை பெற்றிருந்தது.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கார்பியோ என் காருக்கு அமோக வரவேற்பு உள்ளதை போலவே தொடர்ந்து கிளாசிக் மாடலுக்கு நல்ல வரேவற்பு தொடர்ந்து உள்ளது.

Mahindra Scorpio Classic

நமது இந்திய ராணுவத்திற்கு வாங்கப்பட்டுள்ள ஸ்கார்பியோ கிளாசிக் 130 bhp பவரை வழங்கும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல்கள்  டூ வீல் டிரைவ் மட்டுமே வழங்கப்படுகிறது.

மஹிந்திரா பகிர்ந்துள்ள புகைப்பபடம் மூலம், ராணுவத்திற்கான ஸ்கார்பியோ கிளாசிக் மாடலில் பழைய மஹிந்திரா லோகோ பெறுகிறது.  ஸ்கார்பியோ கிளாசிக் தவிர, இந்திய ராணுவம் ஏற்கனவே பல்வேறு 4×4 வாகனங்களான, டாடா சஃபாரி ஸ்ட்ரோம், டாடா செனான், ஃபோர்ஸ் கூர்க்கா மற்றும் மாருதி சுஸுகி ஜிப்சி ஆகியவை அடங்கும்.

சமீபத்தில், அசோக் லேலண்ட் நிறுவனம், 800 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டரை இந்திய ராணுவத்திடம் இருந்து பெற்றுள்ளது.

Exit mobile version