Categories: Car News

பயணிகள் வாகன விற்பனை நிலவரம் 2016-2017

முதன்முறையாக இந்தியாவின் ஆட்டோமொபைல் வராலற்றில் பயணிகள் வாகன விற்பனை 30 லட்சம் எண்ணிக்கையை கடந்து 2017ம் நிதி ஆண்டில் புதிய விற்பனை சாதனையை படைத்துள்ளது.

Supreme Court Bans Sale of BS III Vehicles From April 1

பயணிகள் வாகன விற்பனை

  • முதன்முறையாக இந்திய சந்தையின் பயணிகள் வாகன விற்பனை 30,43,201 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.
  • கடந்த 2016ம் நிதி வருடத்தை விட 2017ல் 9.09 சதவீத கூடுதல் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
  • சியாம் அறிக்கையின்படி 16 ஆட்டோமொபைல் நிறுவனங்களில் 8 ஆட்டோமொபைல் நிறுவனங்கள் விற்பனை விபரத்தை வெளியிட்டுள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சம்மேளனத்தில் பதிவு செய்துள்ள 16 பயணிகள் வாகன தயாரிப்பு நிறுவனங்களில் 8 வாகன நிறுவனங்கள் வெளியிட்டுள்ள 2016-2017 ஆம் நிதி ஆண்டின் அறிக்கையின் படி இந்தியாவின் பயணிகள் வாகன விற்பனை எண்ணிக்கை 3 மில்லியனை கடந்துள்ளது.

நிதி வருடம் எண்ணிக்கை வளர்ச்சி %
2016-17 3043201 9.09
2015-16 2789678 7.24

1. மாருதி சுசுகி

இந்திய பயணிகள் வாகன சந்தையில் 50 சதவீத பங்களிப்பினை பெற்றுள்ள மாருதி சுசுகி நிறுவனம் 16-17 நிதி வருடத்தில் 15,68,603 அலகுகளை விற்பனை செய்துள்ளது. இதே காலகடத்தில் கடந்த 15-16 நிதி ஆண்டில் 14,44,541 அலகுகள் விற்பனை செய்துள்ளது. 15-16 ஆண்டை விட 16-17 நிதி ஆண்டில் 9.8 சதவீத வளர்ச்சியை மாருதி பதிவு செய்துள்ளது.

2. ஹூண்டாய் இந்தியா

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய வாகன தயாரிப்பாளரான ஹூண்டாய் நிறுவனம் 16-17 நிதி வருடத்தில் 509,707 அலகுகளை விற்பனை செய்துள்ளது. இதே காலகடத்தில் கடந்த 15-16 நிதி ஆண்டில் 484,324 அலகுகள் விற்பனை செய்துள்ளது. 15-16 ஆண்டை விட 16-17 நிதி ஆண்டில் 5.2 சதவீத வளர்ச்சியை ஹூண்டாய் பதிவு செய்துள்ளது.

3. மஹிந்திரா & மஹிந்திரா

நாட்டின் முன்னணி யுட்டிலிட்டி வாகன தயாரிப்பாளரான மஹிந்திரா &  மஹிந்திரா  16-17 நிதி வருடத்தில் 236,130 அலகுகளை விற்பனை செய்துள்ளது. இதே காலகடத்தில் முந்தைய 15-16 நிதி ஆண்டில் 236,307 அலகுகள் விற்பனை செய்துள்ளது. 15-16 ஆண்டை விட 16-17 நிதி ஆண்டில் 0 சதவீத வளர்ச்சியை மஹிந்திரா பதிவு செய்துள்ளது.

4. ஹோண்டா இந்தியா

ஹோண்டா இந்தியா பிரிவின் 16-17 நிதி வருடத்தில் 157,313 அலகுகளை விற்பனை செய்துள்ளது. இதே காலகடத்தில் கடந்த 15-16 நிதி ஆண்டில் 192,059 அலகுகள் விற்பனை செய்துள்ளது. 15-16 ஆண்டை விட 16-17 நிதி ஆண்டில் 22 சதவீத வீழ்ச்சியை ஹோண்டா பதிவு செய்துள்ளது.

 

5. டாடா மோட்டார்ஸ்

நமது நாட்டின் மற்றொரு தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ காரின் அறிமுகத்திற்கு பிறகு சிறப்பான வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகின்றது. 16-17 நிதி வருடத்தில் 153,151 அலகுகளை விற்பனை செய்துள்ளது. இதே காலகடத்தில் முந்தைய 15-16 நிதி ஆண்டில் 125,946 அலகுகள் விற்பனை செய்துள்ளது. 15-16 ஆண்டை விட 16-17 நிதி ஆண்டில் 22 சதவீத வளர்ச்சியை டாடா பதிவு செய்துள்ளது.

6. டொயோட்டா க்ரிலோஷ்கர்

டொயோட்டா நிறுவனம் இன்னோவா க்றிஸ்ட்டா , ஃபார்ச்சூனர் போன்ற மாடல்களின் அமோக விற்பனையை பதிவு செய்து வருகின்றது. 16-17 நிதி வருடத்தில் 143,913 அலகுகளை விற்பனை செய்துள்ளது. இதே காலகடத்தில் முந்தைய 15-16 நிதி ஆண்டில் 128,494 அலகுகள் விற்பனை செய்துள்ளது.

7. ஃபோர்டு இந்தியா

அமெரிக்காவின் ஃபோர்ட் நிறுவனத்தின் அங்கமான ஃபோர்டு இந்தியா பிரிவின் 16-17 நிதி வருடத்தில் 91,405 அலகுகளை விற்பனை செய்துள்ளது. இதே காலகடத்தில் முந்தைய 15-16 நிதி ஆண்டில் 79,944 அலகுகள் விற்பனை செய்துள்ளது. 15-16 ஆண்டை விட 16-17 நிதி ஆண்டில் 14.33 சதவீத வளர்ச்சியை ஃபோர்டு பதிவு செய்துள்ளது.

8. நிசான் இந்தியா

நிசான் இந்தியா பிரிவின் டட்சன் பிராண்டு உள்பட 16-17 நிதி வருடத்தில் 57,315 அலகுகளை விற்பனை செய்துள்ளது. இது 15-16 ஆண்டை விட 16-17 நிதி ஆண்டில் 45 சதவீத வளர்ச்சியை நிசான் பதிவு செய்துள்ளது.

மற்றவை விரைவில்