Automobile Tamilan

ரூ.26.78 லட்சத்தில் காம்பஸ் டிராக் எடிசனை வெளியிட்ட ஜீப்

jeep-compass-track-edition-launched

ஜீப் இந்தியாவின் பிரபலமான காம்பஸ் எஸ்யூவி மாடலின் டாப் S வேரியண்டின் அடிப்படையில் டிராக் எடிசனை கூடுதலாக சில ஸ்டைலிங் மாற்றங்கள் மற்றும் கூடுதலாக சில வசதிகளை பெற்று ரூ.26.78 லட்சம் முதல் டாப் 4X4 வேரியண்ட் ரூ.30.58 லட்சம் எக்ஸ்-ஷோரும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

காம்பஸ் டிராக் பதிப்பில் பானெட்டின் மேற்பகுதியில் சிக்னேச்சர் ஹூட் டெக்கால், கிரில்லில் பியானோ பிளாக் , பேட்ஜ்கள் மற்றும் மோல்டிங்ஸ் மற்றும் பிரத்யேக டிராக் எடிஷன் பேட்ஜிங் உள்ளது. புதிய 18-இன்ச் டயமண்ட்-கட் டெக் கிரே அலாய் வீல் மற்றும் மாறுபட்ட ஸ்ப்ரூஸ் பீஜ் சிறப்பம்சங்கள் தைரியமான தோற்றத்தை கொண்டுள்ளது.

கேபினில் புதிய டூபெலோ லெதரெட் இருக்கைகள், டார்க் எஸ்பிரெசோ ஸ்மோக் குரோம் நிறத்துடன், ஸ்ப்ரூஸ் பீஜ் கான்ட்ராஸ்ட் தையல், எம்போஸ் செய்யப்பட்ட ஜீப் பிராண்டிங்குடன் கூடிய டூபெலோ வினைல் இன்ஷர்ட் மற்றும் டிராக் எடிஷன் தரை விரிப்புகள் உள்ளன. கோர்டினா தோல்-சுற்றப்பட்ட ஸ்டீயரிங் வீல் பெற்றுள்ளது.

2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு 170bhp மற்றும் 350Nm டார்க் வழங்கும் ஆறு வேக MT, ஆறு வேக AT என இரண்டு கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

Exit mobile version