Automobile Tamilan

கியாவின் 7 இருக்கை காரன்ஸ் கிளாவிஸ் EV காரின் முக்கிய சிறப்பம்சங்கள்

kia carens clavis on road price list

கியா இந்தியாவின் முதல் உள்நாட்டு தயாரிப்பான 7 இருக்கைகளை பெற்ற எம்பிவி ரக காரன்ஸ் கிளாவிஸ் EV மாடலில் 42Kwh மற்றும் 51.4Kwh என இரண்டு பேட்டரி பேக்கினை பெற்று HTK+, HTX, HTX ER, HTX+ ER என நான்கு விதமான வகையில் ரூபாய் 17,99,000 முதல் ரூபாய் 24,49,000 வரை எக்ஸ்-ஷோரூம் விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளாவிஸ் ice மாடலின் டிசைன் தாத்பரியங்களுடன் பெரும்பாலான வசதிகளை பகிர்ந்து கொள்ளுகின்ற கிளாவிஸ் எலெக்ட்ரிக் காரில் அரோரா பிளாக் பேர்ல், கிளேசியர் வெள்ளை பேர்ல், கிராவிட்டி சாம்பல், இம்பீரியல் நீலம், ஐவரி சில்வர் மேட் மற்றும் பியூட்டர் ஆலிவ் என 6 நிறங்களை பெற்றுள்ளது.

இன்டீரியரில் ஆரம்ப நிலை HTK+ வேரியண்டில் கருப்பு நிறத்துடன் பழுப்பு அப்ஹோல்ஸ்ட்ரி, HTX மற்றும் HTX+ ஆகியவற்றில் நீலத்துடன் பழுப்பு அப்ஹோல்ஸ்ட்ரி உள்ளது.

Kia Carens Clavis on-road price

தமிழ்நாட்டில் கியா காரன்ஸ் கிளாவிஸ் இவி காரின் ஆன்-ரோடு விலை ரூபாய் 19.21 லட்சம் முதல் ரூ.21.86 லட்சம் வரை 42kwh அமைந்துள்ள நிலையில், 51.4Kwh ER வேரியண்ட் ரூபாய் 23.95 லட்சம் முதல் ரூபாய் 26.04 லட்சம் வரை அமைந்துள்ளது.

வேரியண்ட் எக்ஸ்-ஷோரூம் ஆன்-ரோடு
Clavis EV HTK+ ரூ.17,99,000 ரூ.19,21,321
Clavis EV HTX ரூ.20,49,000 ரூ.21,85,675
Clavis EV HTX ER ரூ.22,49,000 ரூ.23,95,432
Clavis EV HTX+ ER ரூ.24,49,000 ரூ.26,03,789

7 இருக்கை கொண்ட மாடல் மட்டுமே கிடைக்கின்ற நிலையில் 6 இருக்கை வேரியண்ட் விற்பனைக்கு வெளியிடாத நிலையில் ஒரு பின்னடைவாக உள்ளது.

காரன்ஸ் கிளாவிஸ் இவி ரேஞ்ச் விபரம்

ஆரம்ப நிலை கிளாவிஸ்  42Kwh பேட்டரி பெற்ற வேரியண்ட் 135Hp பவர் வெளிப்படுத்தும் நிலையில் டார்க் 255Nm வெளிப்படுத்தும் நிலையில் 404 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் என சான்றிதழ் பெற்றுள்ளது. சார்ஜிங் நேரம் 11kw AC விரைவு சார்ஜர் மூலம் 10-100 % பெற 4 மணி நேரம் போதுமானதாகும்.

EXtended Range எனப்படுகின்ற ER வேரியண்டில் உள்ள 51.4Kwh பேட்டரி பெற்ற வேரியண்ட் 171hp பவர் வெளிப்படுத்தும் நிலையில் டார்க் 255Nm வெளிப்படுத்தும் நிலையில் 490 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் என சான்றிதழ் பெற்றுள்ளது. சார்ஜிங் நேரம் 11kw AC விரைவு சார்ஜர் மூலம் 10-100 % பெற 4 மணி நேரம் 45 நிமிடங்கள் போதுமானதாகும்.

10-80 சதவீதம் சார்ஜ் பெற 100kW DC வேகமான சார்ஜிங் பயன்படுத்தினால் இரண்டு பேட்டரியும் வெறும் 39 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உண்மையான ரேஞ்ச் ஆனது 42Kwh பேக் அனேகமாக 310 கிமீ முதல் 340 கிமீ வழங்கலாம், டாப் 51.4Kwh பேட்டரி பேக் 400 கிமீ முதல் 430 கிமீ எட்டலாம். இந்த காரில் ஐ-பெடல் நுட்பம் மற்றும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் அம்சம் அனைத்து வகையிலும் உள்ளது.

பாதுகாப்பில் கிளாவிஸ் இவி வசதிகள்

பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் அனைத்து வேரியண்டிலும் ஏபிஎஸ், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்டரோல், 6 ஏர்பேக்குகள், டயர் பிரெஷர் மானிட்டர், பிரேக் அசிஸ்ட் சிஸ்டம், மலை ஏற மற்றும் இறங்க உதவும் வசதி, அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக், ரிவர்ஸ் சென்சார் உள்ளன.

கூடுதலாக மற்ற வேரியண்டுகளில் கேபின் காற்று சுத்திகரிப்பு வசதியுடன், i-Pedal-க்கான ஆட்டோ மோடு, 20 விதமான பாதுகாப்பு சார்ந்த வசதிகளை பெற்ற Level- 2 ADAS, 360-டிகிரி கேமரா, பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர் ஆகியவை இடம்பெற்றுள்ளது.

HTX ER, HTX+ ER போன்றவற்றில் 17 அங்குல வீல் கொண்டும், குறைந்த திறன் பேட்டரி வேரியண்டுகளில் 16 அங்குல வீலும் உள்ளது.

டாப் HTX+ ER வேரியண்டில் பின்புறத்தில் உள்ள கியா லோகோவில் புராஜெக்சன் விளக்கு, காற்றோட்டமான முன்வரிசை  இருக்கைகள், 4-வழி பவர் அட்ஜெஸ்ட் ஓட்டுநர் இருக்கை, மழை உணர்ந்து செயல்படும் வைப்பர், 8-ஸ்பீக்கர் போஸ் ஒலி அமைப்பு, V2L செயல்பாடு போன்றவை உள்ளது.

இந்த மாடலுக்கு நேரடியான போட்டியாளர் எம்பிவி சந்தையில் இல்லையென்றாலும் சற்று கூடுதலான விலையில் BYD நிறுவனத்தின் eMax 7 எம்பிவி ரூ.27 லட்சம் முதல் ரூ.30 லட்சத்தில் அமைந்துள்ளது. மற்றபடி, காரன்ஸ் கிளாவிஸ் இவியின் விலையில் பேட்டரி எஸ்யூவி கிடைக்கின்றன.

Exit mobile version