Automobile Tamilan

கியா காரன்ஸ் கிளாவிஸில் புதிய வேரியண்டுகள் வெளியானது

காரன்ஸ் கிளாவிஸ்

கியா இந்தியா நிறுவனத்தின் காரன்ஸ் கிளாவிஸ் காரில் கூடுதலாக 5 வேரியண்டுகளை விற்பனைக்கு 6 இருக்கைகளை பெற்றதாக ரூ.16.28 லட்சம் முதல் ரூ.19.26 லட்சம் வரையில் எக்ஸ்-ஷோரூம் விலை அமைந்துள்ளது.

புதிய வேரியண்டுகளின் மூலம் சற்று குறைந்த விலையில் கேப்டன் இருக்கைகளை பெற்ற 6 இருக்கை மாடல்களை பலரும் வாங்குவதற்கு ஏற்றதாகவும், டர்போ பெட்ரோலை தவிர தற்பொழுது டீசல் ஆப்ஷனிலும் 6 இருக்கை கிடைக்க துவங்கியுள்ளது.

எக்ஸ்டீரியரில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், இன்டீரியரில் HTX+ டிரிம், புதிய HTX(O) 8-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டத்தை பெற்றுள்ளது. பொதுவாக இந்த வேரியண்டுகளில் டிரைவ் மோடுகள் (எக்கோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட்), ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், 17-இன்ச் அலாய்ஸ், பனோரமிக் சன்ரூஃப், LED ஹெட்லைட்கள், இரட்டை 12.25-இன்ச் திரைகள், 360-டிகிரி கேமரா உள்ளது.

இந்த காரன்ஸ் கிளாவிஸ் காரில் 1.5  லிட்டர் டர்போ பெட்ரோல் 160 bhp மற்றும் 253 Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த மாடலில் 6 வேக மேனுவல், 6 ஸ்பீடு ஐஎம்டி மற்றும் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், அதிகபட்சமாக 113 பிஹெச்பி மற்றும் 144 என்எம் டார்க்கை உருவாக்குகிறது. இந்த என்ஜின் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் பெற்றுள்ளது.

இறுதியாக, காரன்ஸ்  டீசல் காரில் 1.5-லிட்டர் VGT டீசல் என்ஜினைப் பொறுத்தவரை, 113 பிஹெச்பி மற்றும் 250 என்எம் டார்க்கை உருவாக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6-ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர் பொருத்தப்பட்டுள்ளது.

Exit mobile version