கியா EV5, EV4, EV3 என மூன்று எலக்ட்ரிக் கார் அறிமுகமானது

kia ev lineup

கியா மோட்டார் நிறுவனம், இன்றைக்கு e-GMP பிளாட்ஃபாரத்தை அடிப்படையாக கொண்ட உற்பத்தி நிலை EV5 எஸ்யூவி, EV3 எஸ்யூவி கான்செப்ட் மற்றும் EV4 செடான் கான்செப்ட் என மூன்று மாடல்களை காட்சிப்படுத்தியுள்ளது.

உற்பத்தி நிலையை எட்டியுள்ள EV5 எஸ்யூவி சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள EV4 செடான் ரக கான்செப்ட் டெஸ்லா மாடல் 3 காருக்கு போட்டியாக அமையலாம்.

Kia EV5

சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கியா இவி5 எஸ்யூவி காரில் ஸ்டாரண்டர்டு, லாங்-ரேஞ்சு மற்றும் லாங்-ரேஞ்சு AWD என மூன்று வேரியண்டுகளை கொண்டதாக அமைந்துள்ளது.

64kWh பேட்டரி பேக் கொண்ட ஸ்டாண்டர்டு இவி5 எஸ்யூவி 160kW பவர் வழங்கும் மோட்டார் பெற்று சிங்கிள் சார்ஜ் மூலம் அதிகபட்சமாக 530km ரேஞ்சு கொண்டிருக்கும். அடுத்து, லாங்-ரேஞ்சு வேரியண்ட் 88kWh பேட்டரியை பெற்று 160kW பவர் வழங்கும் மோட்டாரை பெற்று சிங்கிள் சார்ஜ் மூலம் 720km ரேஞ்சு வரை எதிர்பார்க்கலாம்.

EV5 லாங்-ரேஞ்ச் AWD மாடலில் 88kWh பேட்டரி பேக் பெற்று மொத்தமாக 230kW பவர் வெளிப்படுத்தும், சிங்கிள் சார்ஜ் மூலம் 650km ரேஞ்சு வரை எதிர்பார்க்கலாம்.

Kia EV4

புதிய கியா இவி4 செடான் கான்செப்ட் மாடல் மிக நேர்த்தியாக புதிய கியா எலக்ட்ரிக் கான்செப்ட் மாடலுக்கு இணையாக உள்ளது. ஸ்போர்ட்டிவான தோற்ற பொலிவினை கொண்டதாக அமைந்துள்ள இவி4 செடானில் எல்இடி ஹெட்லைட் கொடுக்கப்பட்டு 4 கதவுகளை கொண்டு பின்புறத்தில் ஸ்போர்ட்டிவ் பேக் கொண்டதாக அமைந்துள்ளது.

EV6 மற்றும் EV9 போன்றே இவி4 காரிலும் முக்கோண வடிவத்திலான அலாய் வீல் பெற்றுள்ளது.

Kia EV3

புதிதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள கியா EV3 எஸ்யூவி மாடல் இந்நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்களின் ஆரம்ப நிலை மாடலாகும். பெரிய எஸ்யூவி EV9 மற்றும் EV5 மாடல்களின் வடிவமைப்பினை கொண்டுள்ளது. இவி3 மாடல் ஆனது புதிய CMF டிசைன் அடிப்படையாக பெறுகின்றது.

பாக்ஸி வடிவமைப்பு கொண்டதாக உள்ள இவி3 காரில் மிக நேர்த்தியான தட்டையான வடிவமைப்பினை பெற்ற இன்டிரியர் கொண்டிருக்கலாம்.