Automobile Tamilan

490Km ரேஞ்ச் வழங்கும் கியா காரன்ஸ் கிளாவிஸ் EV ஜூலை 15ல் அறிமுகம்

kia carens clavis ev teased 1

கியா இந்தியாவில் தயாரித்துள்ள காரன்ஸ் கிளாவிஸ் EV (Carens Clavis) எம்பிவி ரக மாடல் 51.4Kwh பேட்டரி பேக்குடன் முழுமையான சார்ஜில் 490கிமீ கொண்டதாக விற்பனைக்கு ஜூலை 15 ஆம் தேதி வரவுள்ளது.

7 இருக்கை கொண்ட கேரன்ஸ் எலக்ட்ரிக் மாடலில் ஏற்கனவே சந்தையில் உள்ள ஹூண்டாய் க்ரெட்டா இவி காரில் உள்ள பேட்டரி பேக்கினை பகிர்ந்து கொள்ளுகின்ற கியா கிளாவிஸ் இவி மாடல் 51.4Kwh பேட்டரி பேக் 490 கிமீ வெளிப்படுத்தும் என டீசர் மூலம் உறுதிப்படுத்தியுள்ள நிலையில் கூடுதலாக 42kwh பேட்டரி பேக்கும் பெற உள்ளது.

இன்டீரியரில் 12.3 அங்குல தொடுதிரை கிளஸ்ட்டருடன் மிக நேர்த்தியான வசதிகளுடன் பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை பெறுவதுடன் பல நவீன அம்சங்களை கொண்டிருக்கும்.

42 kWh பேட்டரி மாடல் 99 kW (135 PS) மற்றும்  வெளிப்படுத்துகின்ற நிலையில் முழுமையான சிங்கிள் சார்ஜில்  390 கிமீ ரேஞ்ச் தரவல்லதாகும். அடுத்து,  51.4 kWh பேட்டரி கொண்ட டாப் மாடல் அதிகபட்சமாக 126 kW (171 PS) பவர் வெளிப்படுத்துவதுடன் முழுமையான சார்ஜில் 490 கிமீ வழங்கும் என உறுதிப்படுத்தியுள்ளது.

Exit mobile version