விரைவில் இந்தியாவில் கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்: கியா மோட்டார்ஸ்

கியா மோட்டார்ஸ், தனது முதல் காரை இந்தியாவில் அறிமும் செய்ய திட்டமிட்டதோடு, அதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளது. சமீபத்தில் தகவல்களின் படி, கியா மோட்டார்ஸ் தந்து முதல் காரை வரும் 2019ம் ஆண்டு ஜூலை அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது

கொரியன் கார் தயாரிப்பு நிறுவனமான இந்த நிறுவனம் இந்தியாவில் தனது கார் பிளான்ட் ஒன்றை உருவாக்கவும் முடிவு செய்துள்ளது. இந்த பிளான்ட்க்குகான பணிகள் ஆந்திராவின் அனந்தப்பூரில் நடந்து வருகிறது. இது கியா மோட்டார்ஸ் இந்தியாவில் தனது கார்களை 2019ம் ஆண்டில் அறிமுக செய்ய திட்டமிட்டுள்ளதை உறுதி செய்துள்ளது.

புதிய மாடல், டிராஸர் என்ற பெயரில் வெளியாகும் என்றும் இது 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார்களுக்கான புக்கிங் மார்ச் இறுதியில் தொடங்கும் என்றும். கார் டெலிவரி மே மாத்தில் இருக்கும் என்றும் தெரிய வந்துள்ளது. சில கியா டீலர்கள், இந்த தகவலை பகிர்ந்து கொண்டுள்ளனர். இந்தியாவின் முக்கிய நகரங்களில் இந்த கார்களின் கொண்டு வர முடிவு செய்துள்ள கியா நிறுவனம். கார் வாங்குபவர் மக்கள் தொகை அதிகம் உள்ள இடங்களில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

கியா நிறுவன கார்கள், தற்போது மார்கெட்டில் உள்ள மாருதி சுசூகி விட்டாரா பிரீஸ் மற்றும் டாட்டா நெக்சான் கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

Exit mobile version