இந்தியாவில் கியா செல்டோஸ் எஸ்யூவி 32,000 புக்கிங்களை அள்ளியது

kia seltos suv

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கியா செல்டோஸ் எஸ்யூவி ரூபாய் 9.69 லட்சம் முதல் ரூ.15.99 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 32,000 புக்கிங் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 16 ஆம் தேதி முதல் முன்பதிவு தொடங்கப்பட்ட முதல் நாளிலே 6,046 முன்பதிவுகளை பெற்ற நிலையில், ஆகஸ்ட் 2019 முதல் வாரத்தில் 23,000 முன்பதிவுகளை கடந்த நிலையில், தற்போது விற்பனைக்கு முன்பாக 32,035 நபர்களால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்நிறுவனம் ஏற்கனவே, ஆந்திராவில் உள்ள அனந்தப்பூர் வசதியிலிருந்து 5,000 யூனிட்களுக்கு மேல் செல்டோஸை தயாரிக்கப்பட்டுள்ளது. அனந்த்பூர் ஆலை தற்போது ஆண்டுக்கு 300,000 லட்சம் யூனிட் உற்பத்தி திறனை கொண்டதாகும்.

முன்பதிவு குறித்து பேசிய கியா மோட்டார்ஸ் இந்தியாவின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் தலைவர் மனோகர் பட், செல்டோஸுக்கு தொடர்ந்து முன்பதிவு செய்ப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், அதிகபட்சமாக 113 பிஹெச்பி மற்றும் 144 என்எம்  டார்க்கை உருவாக்குகிறது. இந்த என்ஜின் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஐவிடி (IVT – Intelligent continuously variable transmission) ஆட்டோ டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது, இந்த மாடல் மைலேஜ் 16.4 கிமீ (MT) மற்றும் 16.3 கிமீ (AT). மேலும், இந்த என்ஜின் 0-100 கிமீ வேகத்தினை எட்டுவதற்கு 11.8 வினாடிகளில் எடுத்துக் கொள்ளும்.

இறுதியாக, புதிய 1.5-லிட்டர் VGT டீசல் என்ஜினைப் பொறுத்தவரை, 113 பிஹெச்பி மற்றும் 250 என்எம் டார்க்கை உருவாக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6-ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் மாடல் வெறும் 11.5 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை பெற முடியும். செல்டோஸ் டீசல் கார் மைலேஜ் 17.8 கிமீ (AT) மற்றும் 20.8 கிமீ (MT) ஆகும்.

1.4 லிட்டர் GDI டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக குதிரைத்திறன் 138 bhp மற்றும் 242 Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

இந்த என்ஜின் 9.7 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டும், மேலும், 16.1 கிமீ (MT) மற்றும் 16.2 கிமீ (DCT) மைலேஜ் வழங்கப்படும். குறிப்பாக இந்த என்ஜின் ஜிடி லைன் தொடரில் மட்டும் கிடைக்க உள்ளது.

Kia Seltos Price

– 1.5 Petrol

HTE – Rs. 9.69 lakhs
HTK – Rs. 9.99 lakhs
HTK+ – Rs. 11.19 lakhs
HTX – Rs. 12.79 lakhs
HTX CVT – Rs. 13.79 lakhs

– 1.5 Diesel

HTE – Rs. 9.99 lakhs
HTK – Rs. 11.19 lakhs
HTK+ – Rs. 12.19 lakhs
HTK+ AT – Rs 13.19 lakhs
HTX – Rs. 13.79 lakhs
HTX+ – Rs. 14.99 lakhs
HTX+ AT – Rs. 15.99 lakhs

– 1.4 Turbo Petrol

GTK – Rs. 13.49 lakhs
GTX – Rs. 14.99 lakhs
GTX DCT – Rs. 15.99 lakhs
GTX+ – Rs. 15.99 lakhs

(all prices, ex-showroom)

Exit mobile version