Automobile Tamilan

கியா செல்டாஸ் எஸ்யூவி கார் உற்பத்தி துவங்கியது

கியா செல்டோஸ் எஸ்யூவி

கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் இந்திய தயாரிப்பு எஸ்யூவி ரக செல்டோஸ் காரின் விற்பனைக்கான உற்பத்தியை ஆந்திர பிரதேச மாநிலம் ஆனந்தப்பூர் ஆலையில் தொடங்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி விற்பனைக்கு வரவிருக்கும் செல்ட்டோஸ் காரின் முன்பதிவு எண்ணிக்கை தற்போது வரை 23,000 எண்ணிக்கையை கடந்துள்ளதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது.  முதல் நாளிலே 6406 முன்பதிவுகளை பெற்றிருந்தது.

பிஎஸ்-6 என்ஜின் பெற உள்ள இந்த மாடலில் மொத்தமாக மூன்று விதமான என்ஜின் ஆப்ஷன் அனைத்து என்ஜின் தேர்வுகளில் கிடைக்க உள்ளது.  1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு மேனுவல் மற்றும் ஆட்டோ கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெற்றிருக்கலாம். இதுதவிர, 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கூடுதலாக டியூவல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸூடன் இடம் பெற்றிருக்கும்.

37 விதமான கனெக்ட்டிவிட்டி அம்சங்களை பெற்றுள்ள 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகள் UVO என்ற பெயரில் இணைக்கப்பட்டுள்ளது. Tech Line மற்றும் GT Line என இரு விதமான வேரியண்டுகளில் வரவுள்ளது.

மேலும் படிங்க – கியா செல்டாஸ் எஸ்யூவி முக்கிய தகவல் மற்றும் வசதிகள்

Exit mobile version