கியா செல்டாஸ் எஸ்யூவி விற்பனை தேதி விபரம் வெளியானது

kia seltos suv india

கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம், இன்றைக்கு அறிமுகம் செய்துள்ள கியா செல்டாஸ் (kia seltos) எஸ்யூவி காரினை ஆகஸ்ட மாத இறுதியில் விற்பனைக்கு ரூ.12 லட்சம் முதல் ரூ.16 லட்சம் விலைக்குள் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. கியாவின் முதல் எஸ்யூவியில் பல்வேறு டெக் வசதிகள் உட்பட மூன்று விதமான என்ஜின் ஆப்ஷனை கொண்டிருக்க உள்ளது.

ஆந்திரா மாநிலம் அனந்தப்பூரில் தொடங்கப்பட்டுள்ள புதிய தொழிற்சாலைஇயல் கியா நிறுவனம், பல்வேறு மாடல்களை தயாரித்து இந்தியா உட்பட சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உள்ளது. குறிப்பாக இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ள செல்டாஸ் மாடல் சர்வதேச அளவில் லத்தின் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியை போன்றே பல்வேறு டெக் அம்சங்களை பெற்று நேரடியாக சவால் விடுக்கின்ற இந்த மாடல் தனது தாய் நிறுவனமான ஹூண்டாய் கிரெட்டா மாடலுக்கும் சவாலினை ஏற்படுத்துவதுடன் ஹாரியர் மற்றும் காம்பாஸ் போன்ற மாடல்களையும் எதிர்கொள்ள உள்ளது.

பிஎஸ்-6 என்ஜின் பெற உள்ள இந்த மாடலில் மொத்தமாக மூன்று விதமான என்ஜின் ஆப்ஷன் அனைத்து என்ஜின் தேர்வுகளில் கிடைக்க உள்ளது.  1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு மேனுவல் மற்றும் ஆட்டோ கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெற்றிருக்கலாம். இதுதவிர, 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கூடுதலாக டியூவல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸூடன் இடம் பெற்றிருக்கும்.

37 விதமான கனெக்ட்டிவிட்டி அம்சங்களை பெற்றுள்ள 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகள் UVO என்ற பெயரில் இணைக்கப்பட்டுள்ளது. Tech Line மற்றும் GT Line என இரு விதமான வேரியண்டுகளில் வரவுள்ளது.

ஆகஸ்ட் மாத இறுதியில் கியா செல்டாஸ் எஸ்யூவி கார் ரூபாய் 12 லட்சம் முதல் ரூ.16 லட்சம் விலைக்குள் அமைந்திருக்கும். மேலும் விற்பனைக்கு வரும் முன்பாக  160 நகரங்களில் சுமார் 265 டீலர்களை தொடங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த டீலர் நெட்வொர்க் மிகப்பெரிய பலமாக கியாவுக்கு விளங்கும்.

மேலும் படிங்க – கியா செல்டாஸ் எஸ்யூவி முக்கிய தகவல் மற்றும் வசதிகள்

Exit mobile version