Automobile Tamilan

ஆகஸ்ட் 22 ஆம் தேதி கியா செல்டோஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்

கியா செல்டோஸ் எஸ்யூவி

இந்தியாவில் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் எஸ்யூவி செல்டோஸ் எஸ்யூவி கார் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பாக செல்டோஸ் சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்டது.

டெக் லைன் மற்றும் ஜிடி லைன் என இரு வேரியண்டுகளில் வெளியாக உள்ள செல்டோஸ் காரில் குறிப்பிடதக்க அம்சமாக மொத்தம் மூன்று விதமான என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இரண்டு பெட்ரோல் என்ஜின் மற்றும் ஒரு டீசல் என்ஜின் ஆகும்.

கியா செல்டோஸ் எஸ்யூவி காரில் பிஎஸ்-6 அல்லது பாரத் ஸ்டேஜ் 6 மாசு உமிழ்வு நடைமுறைக்கு ஏற்றதாக வரவுள்ள இந்த எஸ்யூவி மாடலில் 115hp குதிரைத்திறன் மற்றும் 144 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோ கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். அடுத்ததாக, 115hp பவர் மற்றும் 250 Nm டார்க்  வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு 6 மேனுவல் மற்றும் ஆட்டோ கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெற்றிருக்கலாம்.

இதுதவிர, 140hp பவர் மற்றும் 242 Nm டார்க் வழங்கும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கூடுதலாக டியூவல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸூடன் இடம் பெற்றிருக்கும்.

4.3 மீட்டர் நீளம் கொண்டிருக்கும் இந்த எஸ்யூவி காரின் இன்டிரியரில் 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகள் UVO என்ற பெயரில் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, 360 டிகிரி காரைச் சுற்றி காண்பதற்கான கேமரா, வயர்லெஸ் சார்ஜர் , உள்ளிட்ட அம்சங்களுடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரை பெற்றுள்ளது.

முன்புறத்தில், கியா செல்டோஸ் ஆறு ஏர்பேக்குகள், ஏபிஎஸ், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கட்டுப்பாடு, வாகன ஸ்டெபிளிட்டி மேலாண்மை, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் பிளைண்ட் ஸ்பாட் வியூ மானிட்டர் ஆகியவற்றை கொண்டுள்ளது.

இன்றைக்கு விற்பனைக்கு வெளியான,  எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர், ஹூண்டாய் கிரெட்டா, நிசான் கிக்ஸ் மற்றும் ரெனோ கேப்டூர் போன்ற மாடல்களுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவி போன்றவற்றை எதிர்கொள்ள உள்ள கியா செல்டோஸ் எஸ்யூவி விலை ரூபாய் 12 லட்சம் முதல் ரூபாய் 16 லட்சம் விலைக்குள் எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version