Automobile Tamilan

ரூ.8.99-16.99 லட்சத்தில் கியா சிரோஸ் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது.!

கியா சிரோஸ்

கியா இந்தியா நிறுவனத்தின் பாக்ஸ் ஸ்டைல் பெற்ற மிக நேர்த்தியான புதிய காம்பேக்ட் சிரோஸ் எஸ்யூவி ஆரம்ப விலை ₹8.99 லட்சம் முதல் டாப் வேரியண்டின் விலை ரூபாய் 16.99 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றது. 4 மீட்டருக்கு குறைந்த நீளமுள்ள உள்ள பல்வேறு எஸ்யூவிகளை எதிர்கொள்ளுகின்றது.

Kia Syros Price list

1.0 Turbo Petrol Engine
 HTK MT- Rs. 8,99,900
HTK (O) MT – Rs. 9,99,900
HTK+ MT- Rs. 11,49,900
HTX+ MT- Rs. 13,29,900
HTK+ AT- Rs. 12,79,900
HTX AT- Rs. 14,59,900
HTX+ AT – Rs. 15,99,900
1.5 L Diesel Engine
HTK MT – Rs. 10,99,900
HTK+ MT- Rs. 12,49,900
HTX MT- Rs. 14,29,900
HTX+ AT- Rs. 16,99,900

கூடுதலாக ADAS வசதி பெறுகின்ற HTX Plus (O) பெட்ரோல் ரூ.16.79 லட்சம் மற்றும் HTX Plus (O) டீசல் 17.79 லட்சம்  அறிவிக்கப்பட்டுள்ள விலை அறிமுக சலுகை என இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சிரோஸ் எஸ்யூவி காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 120 PS பவர், 178 Nm டார்க்கினை வெளிப்படுத்துகின்ற மாடல் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் என இரண்டிலும் கிடைக்கின்றது. இதன் மைலேஜ் லிட்டருக்கு 18.2 கிமீ (மேனுவல்) மற்றும் 17.68 கிமீ (ஆட்டோமேட்டிக்) வெளிப்படுத்துகின்றது.

1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ள சிரோஸ் மாடலில் 116 PS பவர், 250 Nm டார்க்கினை வெளிப்படுத்துகின்ற கார் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் என இரண்டிலும் கிடைக்கின்றது. இதன் மைலேஜ் லிட்டருக்கு 20.75 கிமீ (மேனுவல்) மற்றும் 17.6 கிமீ (ஆட்டோமேட்டிக்) வெளிப்படுத்துகின்றது.

பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் னைத்து வேரியண்டிலும் 6 ஏர்பேக்குகள், ஆன்டி-லாக் பிரேக் சிஸ்டம், பிரேக்ஃபோர்ஸ் அசிஸ்ட் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், நிலைப்புத்தன்மை மேலாண்மை, ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் கண்ட்ரோல் உள்ளது.

டாப் HTX+(O) வேரியண்டில் முன் மோதல் எச்சரிக்கை, பிளைன்ட் வியூ மானிட்டர், லேன் கிப் அசிஸ்ட் என 16க்கு மேற்பட்ட வசதிகளை பெற்ற LEVEL-2 ADAS பாதுகாப்பு தொகுப்பினை கொண்டுள்ளது.

Exit mobile version