வெளியானது லடா 4×4 விஷன் கான்செப்ட்

லடா 4×4 விஷன் கார்கள், மாஸ்கோவில் நடந்த மாஸ்கோ மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது. லடா நிறுவனத்தின் புகழ் பெற்ற நிவா கார்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த 4×4 கார்கள் வெளியிட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த காரில் 21 இன்ச் வீல்கள் இந்த கார்கள், ஷேடு மேட் வெண்கல நிற பினிஷ் செய்யப்பட்டுள்ளது. இந்த விஷன் கார்கள் லடா நிறுவனத்தின் தற்போதிய டிசைன் முறைகளுடன், பெரியளவிலான கிராங்க்-ஐ கொண்டுள்ளது.

X-வடிவில் அழகிய டிசைன் பயன்படுத்தப்பட்டுள்ள இந்த கார்களின் தயாரிப்பு மாடல்களில், பக்கவாட்டு வளைந்த நிலையில் இருக்காது. ஆனாலும், காரின் வால் பகுதி லைட்கள், கிராப்பிக்ஸ்களுடன் கூடிய ஹெட்லைட்கள், கேபின் வென்ட், ரியர் புஷ் பிளேட் போன்றவை பொருத்தப்பட்டுள்ளது.

இந்த 4×4 விஷன்களில் பொருத்தப்பட்டுள்ள குரோம்களுடன் கூடிய முன்புற பகுதி, மிட்சுபிஷிவின் டைனமிக் ஷீல்டு போன்றே இருக்கும். இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றல் ரெனால்ட் நிசான், மிட்சுபிஷி அலையன்ஸ் ஆகிய இரண்டு பிராண்ட்களும் ரஷ்யா கார் த்யாரிப்பு நிறுவனத்துடன் பெரும்பாலான ஷேர்களை பகிர்ந்து கொண்டுள்ளன. நிசான் நிறுவனம், மிட்சுபிஷி நிறுவனத்தின் ஸ்டாக்களில் 34 சதவிகிதத்தை கட்டுக்குள் வைத்துள்ளது.

லடா 4×4 விஷன் கார்கள் குறித்து லடா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த கார்கள் 4.2 மீட்டர் நீளம் கொண்டதாக இருப்பதுடன், அதிக மற்றும் குறைந்த அளவு விகித்தில் பயணிக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. இதற்காக அதிநவீன ஆப்-ரோடு டெக்னாலஜி மற்றும் அசிட் சிஸ்டம்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

4×4 விஷன் கார்கள், மாஸ்கோவில் உள்ள நகர்புறம் மற்றும் காடுகளில் பயணிக்க ஏற்றதாக இருப்பதோடு, கம்சட்காவில் எரிமலைகளிலும் பயணிக்கவல்லது. எல்லா சாலைகளிலும் பயணிக்கும் சோதனையை கடந்துள்ள இந்த கார்கள், நாட்டில் உள்ள மோசாமான சாலைகளிலும் எளிதாக பயணிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கார்கள் குறித்து லடா நிறுவனத்தின் தலைமை வடிவமைப்பாளர் ஸ்டீவ் மாட்டின், வெளியிட்ட அறிக்கையில், எதிர்கால தேவையை கருத்தில் கொண்டே லடா கார்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. 4×4 விஷன் கார்களின், தனித்துவமான, வெளிப்படையான, ஆற்றல்மிக்க வடிவமைப்பின் மூலம் இது ஒரு புதிய SUV-கார் என்பது நிருபிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

1977ம் ஆண்டு கார் தயாரிப்பு தொடங்கப்பட்டது முதல் நிவா என்ற பெயரில் கார்களை விற்பனை செய்து வந்த லடா நிறுவனம், தற்போது 4×4 கார்களை தற்போது எஸ்யூவி-களாக அறிமுகம் செய்துள்ளது.

Exit mobile version