ரூ.4.1 கோடியில் லம்போர்கினி ஹூராகேன் எவோ ஸ்பைடர் விற்பனைக்கு வெளியானது

Lamborghini Huracan Evo Spyder

விற்பனையில் உள்ள கூபே ரக மாடலை விட ரூபாய் 22 லட்சம் விலை கடுதலாக ரூபாய் 4.1 கோடி (எக்ஸ்ஷோரூம்) விலையில் விற்பனைக்கு லம்போர்கினி ஹூராகேன் எவோ ஸ்பைடர் கன்வெர்ட்டிபிள் ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் வெளியாகியுள்ளது. இந்த காரில் 640hp வழங்கும் 5.2 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

ஹூராகேன் எவோ மாடலில் உள்ள அதே  V10 என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 640 ஹெச்பி பவர் மற்றும் 600 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 5.2 லிட்டர் வி10 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 8 வேக கியர்பாக்ஸ் உள்ளது. சிறப்பான டார்க் மேம்டுத்தும் வகையிலான அம்சத்துடன் கூடிய ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தை பெற்றுள்ளது. இந்த சூப்பர் காரின் வேகம் மணிக்கு அதிகபட்சமாக 325 கிமீ வரை எட்டும் திறன் கொண்டதாக வரையறுக்கப்பட்டுள்ளது.

0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு அதிகபட்சமாக 3.1 விநாடிகளும் (2.9 விநாடிகள் ஹூராகேன் எவோ), 0 முதல் 200 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 9.3 (9.0 விநாடிகள் ஹூராகேன் எவோ) விநாடிகளும் மட்டும் எடுத்துக் கொள்ளும்.

இந்த காரில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள Lamborghini Dinamica Veicolo Integrata (LDVI) சிஸ்டம் அடிச்சட்டத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மிக சிறப்பான டிரைவிங் டைனமிக்ஸ் வெளிப்படுத்தும் வகையில் ஆசிலேரேஷன், ரோல்ஓவர் தடுக்க முக்கிய பங்காற்றுகின்றது.

ஹூராகேன் எவோ ஸ்பைடர் காரின் மேற்கூறை 17 விநாடிகளில் முடிக்கொள்ளும். அதிகபட்சமாக 50 கிமீ வேகத்தை கடக்கும்போது தானாகவே முடிக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. முன் மற்றும் பின்புற பம்பர்களை புதுப்பித்து இரட்டை சைலன்சருடன் வந்துள்ளது. இந்த காரின் இன்டிரியரில் 8.4 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் வந்துள்ளது. உயர்தரமான இருக்கைகள் உட்பட பல்வேறு ஆடம்பர வசதிகளை பெற்று விளங்குகின்றது.

லம்போர்கினி ஹூராகேன் EVO ஸ்பைடர் காரின் விலை ரூ. 4.1 கோடி ஆகும்.

Exit mobile version